பெங்களூரு கலக்கல் வெற்றி: ஹர்ஷல் 'ஹாட்ரிக்' சாதனை

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021
Share
Advertisement
துபாய்: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஹர்ஷல் படேல் 'ஹாட்ரிக்' சாதனை படைக்க பெங்களூரு அணி 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, 'நடப்பு சாம்பியன்' மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.கோஹ்லி விளாசல்பெங்களூரு

துபாய்: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஹர்ஷல் படேல் 'ஹாட்ரிக்' சாதனை படைக்க பெங்களூரு அணி 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, 'நடப்பு சாம்பியன்' மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



latest tamil news




கோஹ்லி விளாசல்

பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல் (0) ஏமாற்றினார். பும்ரா, மில்னே பந்தில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் கேப்டன் கோஹ்லி. இவருக்கு ஸ்ரீகர் பரத் (32) ஒத்துழைப்பு தந்தார். குர்னால் பாண்ட்யா பந்தை சிக்சருக்கு அனுப்பிய மேக்ஸ்வெல், மில்னே வீசிய 13வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். அபாரமாக ஆடிய கோஹ்லி, ஐ.பி.எல்., அரங்கில் தனது 42வது அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது மில்னே பந்தில் கோஹ்லி (51) அவுட்டானார். மில்னே வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் மேக்ஸ்வெல். பும்ரா வீசிய 19வது ஓவரில் மேக்ஸ்வெல் (56), டிவிலியர்ஸ் (11) வெளியேறினர். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. கைல் ஜேமிசன் (2), கிறிஸ்டியன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news



ஹர்ஷல் கலக்கல்

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (24), கேப்டன் ரோகித் (43) நல்ல துவக்கம் தந்தனர். இஷான் கிஷான் (9), சூர்யகுமார் யாதவ் (8), குர்னால் பாண்ட்யா (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஹர்ஷல் படேல் வீசிய 17வது ஓவரின் முதல் மூன்று பந்தில் ஹர்திக் பாண்ட்யா (3), போலார்டு (7), ராகுல் சகார் (0) அவுட்டாக, 'ஹாட்ரிக்' சாதனை பதிவானது. சகால் 'சுழலில்' பும்ரா (5) போல்டானார். தொடர்ந்து அசத்திய ஹர்ஷல் பந்தில் மில்னே (0) வெளியேறினார். மும்பை அணி 18.1 ஓவரில் 111 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட் கைப்பற்றினார்.

முதல் இந்திய வீரர்

அபாரமாக ஆடிய பெங்களூரு கேப்டன் கோஹ்லி 51 ரன் விளாசினார். இவர், தனது 13வது ரன்னை கடந்த போது 'டுவென்டி-20' அரங்கில் 10 ஆயிரம் ரன்னை எட்டிய முதல் இந்திய வீரர், 5வது சர்வதேச வீரரானார். இதுவரை 314 போட்டியில், 5 சதம், 74 அரைசதம் உட்பட 10038 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே விண்டீசின் கெய்ல் (14275 ரன்), போலார்டு (11195), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10808), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10019) இம்மைல்கல்லை எட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X