சர்வதேச பாட்மின்டன் போட்டி: கோவை மாணவருக்கு வெள்ளி

Added : செப் 27, 2021
Share
Advertisement
கோவை:உக்ரைன் நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான பாட்மின்டன் போட்டியில் கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சதீஷ்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.'இன்டர்நேஷனல் பாட்மின்டன் பெடரேஷன்' (பி.டபிள்யூ.எப்.,) சார்பில், சர்வதேச அளவிலான 'உக்ரைன் இன்டர்நேஷனல் பாட்மின்டன் சீரிஸ்' போட்டி, உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் நடந்தது.சீனியர் பிரிவில் நடந்த
 சர்வதேச பாட்மின்டன் போட்டி: கோவை மாணவருக்கு வெள்ளி

கோவை:உக்ரைன் நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான பாட்மின்டன் போட்டியில் கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சதீஷ்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.'இன்டர்நேஷனல் பாட்மின்டன் பெடரேஷன்' (பி.டபிள்யூ.எப்.,) சார்பில், சர்வதேச அளவிலான 'உக்ரைன் இன்டர்நேஷனல் பாட்மின்டன் சீரிஸ்' போட்டி, உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் நடந்தது.சீனியர் பிரிவில் நடந்த போட்டியில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, டென்மார்க், போலந்து, நெதர்லாந்து, உக்ரைன் என, 15 நாடுகளிலிருந்து, 120க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய அணியின் சார்பில், 30 வீரர்கள் பங்கேற்றனர்.ஆண்களுக்கான இறுதிப்போட்டியில், ஐதராபாத்தை சேர்ந்த பியான்சு, 2-0 என்ற செட் கணக்கில், தமிழ்நாட்டின் சதீஷ்குமாரை வீழ்த்தினார்.இதன் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சதீஷ்குமார் வெள்ளி பதக்கமும், பெண்கள் பிரிவில் ஆத்யா வாரியத் வெண்கலம் பதக்கமும் வென்று அசத்தினர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் வடிவேலு ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X