பொது செய்தி

இந்தியா

நாகை மீனவர்கள் 38 பேர் ஒப்படைப்பு

Added : செப் 27, 2021
Share
Advertisement
காரைக்கால் -இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 38 பேர், இந்திய கடலோர காவல் படையினர் மூலம் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி பகுதிகளை சேர்ந்த 38 மீனவர்கள், 4 விசைப்படகுகளில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் கடலில் மீன்

காரைக்கால் -இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 38 பேர், இந்திய கடலோர காவல் படையினர் மூலம் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி பகுதிகளை சேர்ந்த 38 மீனவர்கள், 4 விசைப்படகுகளில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி, நாகை மீனவர்களை கைது செய்தனர். திசை மாறி வந்ததால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள், இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இந்திய கடலோர காவல் படையினர், 38 மீனவர்கள், 4 விசைப்படகுகளையும் நேற்று காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, கூட்டுக்குழு விசாரணைக்கு பிறகு, நாகை மீன் வளத் துறையிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X