சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டு வீச்சு வழக்கில் ஒருவர் சிறையில் அடைப்பு

Added : செப் 27, 2021
Share
Advertisement
கடலுார்-வெடிகுண்டு வீச்சு வழக்கில் கைதான மேலும் ஒருவர் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த குமரப்பரெட்டிச்சாவடியில், கடந்த ஜூன் 30ம் தேதி அதிகாலை நடந்த வெடிகுண்டு வீச்சில் வேல்முருகன் என்பவர் காயமடைந்தார். புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தார்.இவ்வழக்கில்

கடலுார்-வெடிகுண்டு வீச்சு வழக்கில் கைதான மேலும் ஒருவர் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த குமரப்பரெட்டிச்சாவடியில், கடந்த ஜூன் 30ம் தேதி அதிகாலை நடந்த வெடிகுண்டு வீச்சில் வேல்முருகன் என்பவர் காயமடைந்தார். புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தார்.

இவ்வழக்கில் செல்லஞ்சேரி தேவா (எ) தேவன், 24; கரிக்கலாம்பாக்கம் அருணாச்சலம், 23; அய்யனார் (எ) சின்ன அய்யனார் (எ) ரோஸ் அய்யனார், 21; வினாயகம் (எ) வினாயகமூர்த்தி, 31; கீழ்குமாரமங்கலம் ஹமந்த், 20; களையூர் ராம்கி, 25; ஆகியோரை போலீசார் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.முக்கிய குற்றவாளிகளான அருணாச்சலம், வினாயகமூர்த்தி, அய்யனார் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கைதான செல்லஞ்சேரி தேவா மீது புதுச்சத்திரம் மற்றும் சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செயலை தடுக்க எஸ்.பி., சக்தி கணேசன் பரிந்துரையின்படி, குற்றவாளி தேவாவை ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறையில் உள்ள தேவாவிடம் போலீசார் வழங்கினர். இவ்வழக்கில் இது வரை 4 பேர் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X