சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஏன் இந்த 'பில்டப்?'

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021
Share
Advertisement
'வயதில் மூத்த நபரின் காலைத் தொட்டு வணங்கியது தவறா; இதை இவ்வளவு பெரிய பிரச்னையாக்குகின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், மத்திய பிரதேச மாநில பா.ஜ., மூத்த தலைவரான அலோக் சஞ்சார். இவர், போபால் லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்.பி.,சமீபத்தில் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ம.பி., முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்சிக்கு
அக்கம் பக்கம்

'வயதில் மூத்த நபரின் காலைத் தொட்டு வணங்கியது தவறா; இதை இவ்வளவு பெரிய பிரச்னையாக்குகின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், மத்திய பிரதேச மாநில பா.ஜ., மூத்த தலைவரான அலோக் சஞ்சார்.

இவர், போபால் லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்.பி.,சமீபத்தில் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ம.பி., முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்சிக்கு அலோக் சஞ்சரும் வந்திருந்தார். திக்விஜய் சிங்கை பார்த்ததும், வயதில் பெரியவரான அவரது காலைத் தொட்டு வணங்கினார்; அவரும் அலோக் சஞ்சரை ஆசீர்வதித்தார். இருவருக்கும் நீண்ட நாள் நட்பு உண்டு. அந்த அடிப்படையில் திக்விஜய் சிங்கிடம், ஆசீர்வாதம் பெற்றார்.

ஆனால் இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அலோக் சஞ்சர், காங்கிரசில் இணையப் போவதாக புயல் வேகத்தில் வதந்தி பரவியது. ம.பி., மாநில பா.ஜ., மூத்த தலைவர்களில் இருந்து கிளை நிர்வாகிகள் வரை, அலோக் சஞ்சருக்கு போன் செய்து, 'தலைவரே, அவசரப்படாதீங்க; இப்போதுள்ள நிலையில் காங்கிரசில் இணைவது விஷப் பரீட்சையாகவே இருக்கும்...' என, வேண்டுகோள் வைத்தனர்.

குழம்பிப் போன அலோக் சஞ்சார், 'காங்கிரசில் இணையும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. யதார்த்தமாக நடந்த ஒரு விஷயத்தை இவ்வளவு, 'பில்டப்' செய்து, என் அரசியல் வாழ்க்கையையே காலி செய்து விடுவர் போலிருக்கிறதே' என, புலம்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X