பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி சாலை மேம்பாலத்தில் 2024ம் ஆண்டில் 'பறக்கலாம்'

Added : செப் 27, 2021
Share
Advertisement
கோவை:'கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரையிலான உயர்மட்டப்பாலம் கட்டும் பணி, 2024ல் நிறைவடையும்' என்று ஆய்வுக்கு வந்த, பொதுப்பணித்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவையில், உப்பிலிபாளையம் வரை கோல்டுவின்ஸ் முதல் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.தென்னம்பாளையம் சாலை ராசிபாளையத்தில்

கோவை:'கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரையிலான உயர்மட்டப்பாலம் கட்டும் பணி, 2024ல் நிறைவடையும்' என்று ஆய்வுக்கு வந்த, பொதுப்பணித்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவையில், உப்பிலிபாளையம் வரை கோல்டுவின்ஸ் முதல் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.தென்னம்பாளையம் சாலை ராசிபாளையத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சரிடம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவை அவிநாசி சாலையில் 10.10 கி.மீ.,க்கு 1621 கோடி ரூபாயில் உயர் மட்டப்பாலம் அமைப்பதற்கு பணி நடக்கிறது. ஒப்பந்த காலம் 48 மாதம். பணி 2024 ஆக., மாதம் முடிவடையும். மேம்பாலத்தின் மொத்த நீளம் 9.665 கி.மீ., உயர் மட்டச்சாலை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதையாக அமைக்கப்படுகிறது.இரண்டு புறமும் 10.50 மீட்டர் அகலத்தில் சேவைச்சாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாயும் அமைகிறது. உயர் மட்டச்சாலையில், விமான நிலைய சந்திப்பு அருகிலும், ஹோப் காலேஜ் அருகிலும் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கப்படுகிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஐந்து இடங்களில், சுரங்க நடைபாதை அமைக்கப்படும். உயர் மட்டச்சாலைக்கு 306 துாண்களும், ஏறுதளம், இறங்குதளத்துக்கு 91 துாண்களும் அமைக்கப்படுகின்றன. தற்போது 190 துாண்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.பாலம் கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், கான்கிரீட்டின் தரம் அறியும் சோதனையை செய்யுமாறு கூறி, அதையும் பார்வையிட்டார்.கலெக்டர் சமீரன், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோட்டப் பொறியாளர் நபீஸா பீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X