பொது செய்தி

தமிழ்நாடு

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை; போஸ்டர் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தல்

Added : செப் 27, 2021
Share
Advertisement
சென்னை : 'அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டு 'போஸ்டர்' ஒட்ட வேண்டாம்' என, விஜய் ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நடிகர் விஜயை அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு ஒப்பிட்டு, போஸ்டர் ஒட்டுவது விஜய் ரசிகர்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. அதுவும், சமீபகாலமாக அண்ணாத்துரை உள்ளிட்ட தலைவர்களுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டுவது, அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில், அரசியல்

சென்னை : 'அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டு 'போஸ்டர்' ஒட்ட வேண்டாம்' என, விஜய் ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நடிகர் விஜயை அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு ஒப்பிட்டு, போஸ்டர் ஒட்டுவது விஜய் ரசிகர்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. அதுவும், சமீபகாலமாக அண்ணாத்துரை உள்ளிட்ட தலைவர்களுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டுவது, அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில், அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜயை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று, விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:சமீப காலமாக ரசிகர்கள் சிலர் ஆர்வ மிகுதியால், விஜயை அரசியல் தலைவர்களோடு இணைத்து, அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி, போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. இதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது. இத்தகைய செயல்களை விஜய் விரும்புவதில்லை. இனியும் இவ்வாறு தொடர்ந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X