பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலாக 500 பஸ்களை இயக்க ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு

Added : செப் 27, 2021
Share
Advertisement
சென்னை : 'குளிர்சாதன வசதி உள்ள பஸ்களை இயக்கலாம்' என அரசு அனுமதி அளித்துள்ளதால், கூடுதலாக, 5௦௦ ஆம்னி பஸ்களை இயக்க உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர். தமிழகத்தில் 3,500 ஆம்னி பஸ்கள் உள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால், தற்போது 500 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அக்., 1 முதல் குளிர்சாதன வசதியுள்ள பஸ்களை இயக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, அரசு

சென்னை : 'குளிர்சாதன வசதி உள்ள பஸ்களை இயக்கலாம்' என அரசு அனுமதி அளித்துள்ளதால், கூடுதலாக, 5௦௦ ஆம்னி பஸ்களை இயக்க உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.

தமிழகத்தில் 3,500 ஆம்னி பஸ்கள் உள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால், தற்போது 500 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அக்., 1 முதல் குளிர்சாதன வசதியுள்ள பஸ்களை இயக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, அரசு போக்குவரத்து கழகங்கள் 702 குளிர்சாதன வசதியுள்ள பஸ்களை இயக்க முன்வந்துள்ளன.இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து வரும் பண்டிகை தினங்களை முன்னிட்டு, ஓடாமல் இருந்த குளிர்சாதன வசதியுள்ள ஆம்னி பஸ்கள்பராமரித்து இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: ஒன்றரை ஆண்டுகளில் நான்கு மாதங்களில் படிப்படியாக, 500 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன; என்றாலும், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. வரவேற்பை பெற்றதுபொதுவாக ஒரு ஆம்னி பஸ்சுக்கு, ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரை சாலை வரி செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல, காப்பீடு, வங்கி கடனுக்கான வட்டி, பராமரிப்பு செலவு, பணியாட்கள் கூலி என 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஆனால், பஸ்களில் பயணிக்க பலரும் அஞ்சுவதால் எதிர்பார்த்த அளவு வசூலாவதில்லை.

இதனால், பெரும்பாலான உரிமையாளர்கள் பஸ்களை இயக்கவில்லை என்ற, 'ஸ்டாப்பேஜ்' படிவத்தை அரசிடம் செலுத்தி, சாலைவரியில் இருந்து விலக்குபெற்றுள்ளனர்.தற்போது, தமிழக அரசு, 'ஏசி' பஸ்களை இயக்க அனுமதி அளித்துள்ளதால், கூடுதலாக 500'ஏசி' பஸ்களை மட்டும்,சோதனை அடிப்படையில்இயக்க உள்ளோம். பயணியர் அளிக்கும் வரவேற்பை பொறுத்து, தீபாவளி பண்டிகைக்குள்கூடுதல் பஸ்களைஇயக்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X