அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சருக்கு சம்மன் அனுப்ப முடிவு; லஞ்ச ஒழிப்பு துறை

Added : செப் 27, 2021
Share
Advertisement
சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள, முன்னாள் அமைச்சர் வீரமணியிடம் நேரில் விசாரிப்பதற்காக, அவருக்கு, 'சம்மன்' அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள இடையம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி, 57. இவர், அ.தி.மு.க., ஆட்சியில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள, முன்னாள் அமைச்சர் வீரமணியிடம் நேரில் விசாரிப்பதற்காக, அவருக்கு, 'சம்மன்' அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள இடையம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி, 57. இவர், அ.தி.மு.க., ஆட்சியில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம், சில தரப்பில் ஆதாரங்களுடன் புகார்கள் தரப்பட்டன. அதனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, வீரமணி மீதான சொத்து குவிப்பு விவரங்களை திரட்டினர்.

இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தேர்தலில் போட்டியிட்ட வீரமணி, தன் வேட்பு மனுவுடன், தன் பெயரிலும், தன் குடும்பத்தார் பெயர்களிலும் உள்ள சொத்து விபரங்களைதாக்கல் செய்திருந்தார்.அதன் அடிப்படையில், வீரமணி பெயரில் உள்ள சொத்து விபரங்கள், அவரின் குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள் பெயரில் உள்ள வங்கி ரொக்க இருப்பு, நகைகள். முதலீடு, சேமிப்பு, சொகுசு பங்களாவின் பதிப்பு என, அனைத்து வகையான கணக்கு விபரங்களையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்தனர்.

அப்போது, வீரமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 28.78 கோடி ரூபாய்க்கு, அதாவது 654 சதவீதம் அளவுக்கு சொத்து குவித்து இருந்தது தெரியவந்தது.எனவே, வழக்குப்பதிவு செய்து, சில தினங்களுக்கு முன், வீரமணியின் பண்ணை வீடு, நட்சத்திர ஓட்டல் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என 35 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில் 34.01 லட்சம் ரொக்கம் 1.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான டாலர்கள், ரோல்ஸ் ராய்ல்ஸ் உட்பட ஒன்பது சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம், 47 கிராம் வைரம்.7 கிலோ வெள்ளி பொருட்கள், 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 551 யூனிட் மணல் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வீரமணி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து, அவரிடம் நேரில் விசாரித்து ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது. அதனால், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவருக்கு, 'சம்மன்' அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X