பொது செய்தி

தமிழ்நாடு

இரவிலும் வீடு வீடாக சென்று தடுப்பூசி!

Added : செப் 27, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 4,712 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 26 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமில், காலை, 7:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை தடுப்பூசி
 இரவிலும் வீடு வீடாக  சென்று தடுப்பூசி!

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 4,712 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 26 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமில், காலை, 7:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.மத்வராயபுரம், இருட்டுப்பள்ளம், முகாசிமங்கலம், நாதேகவுண்டன்புதூர், உரிப்பள்ளம், பூலுவபட்டி, பூச்சியூர், வேடபட்டி உள்ளிட்ட பகுதிகளில், மாலை, 6:00 மணி முதல், சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று, இரவு, 9:00 மணி வரை, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.இம்முகாமில், 552 கோவேக்சின் தடுப்பூசியும், 4,160 கோவிஷீல்டு தடுப்பூசியும் என, மொத்தம், 4,712 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியில், சுகாதாரத்துறையினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X