சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். தமிழகத்தில், தான் மட்டுமே அறிவாளி போல செயல்படுகிறார். நிதி அமைச்சர் பொறுப்பேற்றதில் இருந்து, பா.ஜ., தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும்.'டவுட்' தனபாலு: முதல்வரே குட்டி தனி
 'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். தமிழகத்தில், தான் மட்டுமே அறிவாளி போல செயல்படுகிறார். நிதி அமைச்சர் பொறுப்பேற்றதில் இருந்து, பா.ஜ., தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும்.
'டவுட்' தனபாலு: முதல்வரே குட்டி தனி விமானத்தில் தான் செல்கிறார். ஆனால், நிதியமைச்சருக்கு குட்டி விமானம் என்றால் 'அலர்ஜி'யாம். என்ன செய்வது... வெளிநாட்டில் படித்து, வேலை பார்த்து விட்டால், நம் நாட்டில் உள்ளவற்றை மதிக்கத் தெரியவில்லையே... இவரை கண்டித்தால், எதிர்த்து பேசி விடுவார் என முதல்வரும் அஞ்சுகிறாரோ என்ற, 'டவுட்' மக்களுக்கு கூட வந்துவிட்டது!

முதல்வர் ஸ்டாலின்: ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள், தேர்தல் வாக்குறுதியில் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை செய்து விட்டோம். சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. இதை ஏதோ, ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இப்படித் தான் இருப்போம்.

'டவுட்' தனபாலு: தேர்தல் பிரசாரத்தின் போது, ஊருக்கு ஊர் பவானி ஜமுக்காளம் விரித்து, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தீர்கள். அதில், 200 தான் நிறைவேற்றப்பட்டுள்ளன அல்லது நிறைவேற்ற அறிவிப்புகள் வந்துள்ளன. பிற இன்னும் செயல்படுத்தப்படவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, எப்போதும் இப்படித் தான் இருப்போம் என நீங்கள் கூறுவது, மக்களுக்கு பல விதமான, 'டவுட்'டுகளை ஏற்படுத்தி விடுமே!lll

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: செப்டம்பர், அக்டோபரில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன என கூறப்படுகிறது. கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகம் உள்ள சாலைகளில், அதிக நபர்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். இதை அரசு கண்காணிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: என்ன தான் அரசு கண்காணித்தாலும், சட்டங்கள் போட்டு கெடுபிடி செய்தாலும், தனிமனிதர்கள் திருந்தாவிட்டால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. அதுபோன்ற சூழலில் தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தொற்று அதிகரித்து வருவதை பார்த்தால், மீண்டும் ஊரடங்கு கொடுமை வந்து விடுமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-செப்-202115:24:23 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் வெற்றிக்காக அடுக்கி வைத்த வாக்குறுதிகள் கஜானாவின் உண்மை நிலை தெரிந்ததும் ஸ்தம்பித்து நிற்கின்றன இங்கு என்ன, சொன்னதை செய்யாத பிரதிநிதிகளை வாபஸ் பெற வழியா இருக்கிறது ? அதுதான், ரெயிடு, கொடநாடு என்று கிளறி மக்களை திசை துப்புகிறார்கள்
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
27-செப்-202107:40:02 IST Report Abuse
rajan பா.ஜ., தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும்.'
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
27-செப்-202101:56:58 IST Report Abuse
kijan ஒரு வேளை புதுசா வாங்கின சொகுசு விமானத்துக்கு அடிபோடுறாரோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X