பொது செய்தி

தமிழ்நாடு

மணலிபுதுநகர் கால்வாய் துார் வாரும் பணி 'ஜரூர்'

Added : செப் 27, 2021
Share
Advertisement
மணலிபுதுநகர்-மணலிபுதுநகர் கால்வாய் துார் வாரும் பணி, படுவேகமாக நடந்து வருகிறது.சென்னை மணலிபுதுநகர், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு, ஊருக்குள் செல்லும் மழை நீர் கால்வாய் சரிவர பராமரிக்கப்படாததும் முக்கிய காரணம்.எனவே, சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் இக்கால்வாயை துார் வாரி, இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என

மணலிபுதுநகர்-மணலிபுதுநகர் கால்வாய் துார் வாரும் பணி, படுவேகமாக நடந்து வருகிறது.சென்னை மணலிபுதுநகர், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு, ஊருக்குள் செல்லும் மழை நீர் கால்வாய் சரிவர பராமரிக்கப்படாததும் முக்கிய காரணம்.எனவே, சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் இக்கால்வாயை துார் வாரி, இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.தற்போது, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியான 3,200 கோடி ரூபாய் மதிப்பில், கொசஸ்தலை வடிநில பகுதிகளான 1, 2, 3, 7 ஆகிய மண்டலங்களில், மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய் துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம் 15 வது வார்டு, மணலிபுதுநகர் 80 அடி சாலையை ஒட்டி, பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டு கிடந்த மழை நீர் கால்வாயை துார் வாரி சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. மேலும், இருபுறமும் மண் சரியாதபடி கான்கிரீட் சுவர் அமைக்கும் பணியும் நடக்கவுள்ளது. இப்பணி முடியும்பட்சத்தில் விச்சூர், பொன்னேரி நெடுஞ்சாலை, பெரிய ஈச்சங்குழி குளக்கரை தெரு, மணலிபுதுநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேக்கம் இருக்காது.மொத்த மழை நீரும் கால்வாய் வழியாக, கொசஸ்தலை உபரி கால்வாயில் இணையும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு நடக்கின்றன என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X