பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் கட்சி கொடி பெயர் பலகை பொருத்த கூடாது

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஊட்டி:'நீலகிரியில் அக்., 2ம் தேதி முதல் கட்சி கொடி, பெயர் பலகைகளை வாகனங்களில் வைக்க கூடாது,' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி எஸ்.பி., ஆசிஷ்ராவத் அறிக்கை:கோர்ட் உத்தரவுப்படி அரசியல் கட்சி, மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்களது சொந்த வாகனத்தின் முகப்பில் பொருத்தப்பட்ட கொடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; வாகனத்தின் முன்புறம் தனது பதவிகளை கொண்ட

ஊட்டி:'நீலகிரியில் அக்., 2ம் தேதி முதல் கட்சி கொடி, பெயர் பலகைகளை வாகனங்களில் வைக்க கூடாது,' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி எஸ்.பி., ஆசிஷ்ராவத் அறிக்கை:கோர்ட் உத்தரவுப்படி அரசியல் கட்சி, மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்களது சொந்த வாகனத்தின் முகப்பில் பொருத்தப்பட்ட கொடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; வாகனத்தின் முன்புறம் தனது பதவிகளை கொண்ட போர்டுகள் வைத்து இருப்பின் அதையும் அகற்ற வேண்டும்.எம்.பி., எம்.எல்.ஏ.,க் கள்., கட்சி கொடியை பொருத்தி கொள்ள விதிவிலக்கு உண்டு. தங்களது சொந்த வாகனத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது அமைப்பின் தலைவர்கள் புகைப்படம் வாகனத்தின் உள்ளே பார்த்தவாறு மட்டும் இருக்க வேண்டும்.வெளிப்புறத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாதவாறு இருத்தல் வேண்டும்; வாகனத்தின் உரிமையாளர் அவர்களது வாகனத்தில் வண்ண விளக்குகள் கண் கூசும் தன்மை கொண்ட அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், சைலன்சர்கள் போன்ற மாற்றங்கள் செய்யக்கூடாது.அக்., 2ம் தேதி முதல் அமல் மேலும், வாகனங்களில் இடது மற்றும் வலது பக்கமுள்ள ஜன்னல் கண்ணாடிகள் கண்டிப்பாக வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட, 40 சதவீதம் மட்டும் குளிர்விக்கும் கண்ணாடி பொருத்தி கொள்ளலாம். வாகன எண்களும் விதிகளின் படி இருக்க வேண்டும்.மேற்கண்ட விதிகள் அனைத்தும் அக்.,2ம் தேதி முதல் முழுமையாக எந்த விதிவிலக்கும் இன்றி அமலுக்கு வருகிறது. இதனை அனைவரும் பிற்பற்ற வேண்டும். இவ்வாறு, எஸ்.பி., ஆசிஷ் ராவத் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X