கழிப்பறை வசதி இல்லாததால் பெண் போலீசார் சிரமம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
தாம்பரம்--தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில், போதிய கழிப்பறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைகளை கழிக்க, பெண் போலீசார் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தின், முதல் நடை மேடையில், அரசு இருப்புபாதை காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, காவலர் துவங்கி, ஆய்வாளர் வரை, 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.இக்காவல் நிலையம், வாடகை

தாம்பரம்--தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில், போதிய கழிப்பறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைகளை கழிக்க, பெண் போலீசார் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தின், முதல் நடை மேடையில், அரசு இருப்புபாதை காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, காவலர் துவங்கி, ஆய்வாளர் வரை, 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.இக்காவல் நிலையம், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில், இங்கு, பெண் போலீசாருக்கென தனி கழிப்பறை இல்லாததால், அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து, போலீசார் கூறியதாவது:ஆய்வாளருக்கு தனியாக, கழிப்பறை வசதி உள்ள நிலையில், உதவி ஆய்வாளர்கள், பெண் மற்றும் ஆண் காவலர்களுக்கு என தனித்தனியாக கழிப்பறை வசதியில்லை.இரு தரப்பினரும் ஒரே கழிப்பறையையே பயன்படுத்தும் நிலை உள்ளது. கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திடம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல், வலியுறுத்தி வருகிறோம்.அவர்கள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு, செய்து தரும், வசதிகளில் பாதியளவிற்கு கூட, எங்களுக்கு, செய்து தர மறுக்கின்றனர்.

கழிப்பறை வசதியில்லாததால், பெண் போலீசார், மாத விலக்கு காலங்களின் போது, சிரமத்திற்கு ஆளாகின்றனர்.செயின், மொபைல் போன் பறிப்பு மட்டுமின்றி, ரயில் விபத்துக்களில் அடிபட்டு இறப்பவர்களின் உடல்களை கூட, எவ்வித தயக்கமுமின்றி, அகற்றி பணி செய்து வரும், எங்களுக்கு, நாங்கள் வேலை பார்க்கும், காவல் நிலையத்திலேயே, அடிப்படை வசதி இல்லாதது, வேதனையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X