சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்திமுனையில் பணம் பறித்தோர் கைது

Added : செப் 27, 2021
Share
Advertisement
வேளச்சேரி--இறைச்சி கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த, சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அல்டாப் உசேன், 21; இறைச்சி கடை ஊழியர். நேற்று முன்தினம் அவர் கடையில் இருந்தபோது மது போதையில் வந்த மூவர், கடையில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டி, 18 ஆயிரம் ரூபாய் பறித்து சென்றனர்.இது குறித்த

வேளச்சேரி--இறைச்சி கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த, சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அல்டாப் உசேன், 21; இறைச்சி கடை ஊழியர். நேற்று முன்தினம் அவர் கடையில் இருந்தபோது மது போதையில் வந்த மூவர், கடையில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டி, 18 ஆயிரம் ரூபாய் பறித்து சென்றனர்.இது குறித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், பணம் பறித்தது, வேளச்சேரியைச் சேர்ந்த சூர்யா, 25, செல்லபாண்டி, 24, அவருடைய சகோதரர் அருண்தேவன், 28 ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 5,000 ரூபாய், இருசக்கர வாகனம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X