சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகள், கூலிப்படையினர் 3,325 பேர் கைது; ஏழு துப்பாக்கிகள்; 1,110 ஆயுதங்கள் பறிமுதல்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுதும், போலீசார் 52 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தி, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய 3,325 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.அவர்களிடம் இருந்து, நாட்டு துப்பாக்கிகள், கத்தி, அரிவாள், ஈட்டி என 1,110 ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில், மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த வசீம் அக்ரம், 40,

சென்னை : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுதும், போலீசார் 52 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தி, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய 3,325 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.



latest tamil news


அவர்களிடம் இருந்து, நாட்டு துப்பாக்கிகள், கத்தி, அரிவாள், ஈட்டி என 1,110 ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில், மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த வசீம் அக்ரம், 40, கொல்லப்பட்டார். அதிரடி சோதனைகூலிப்படையினர் வாயிலாக அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான, 'டீல்' இம்தியாஸ் என்பவர் தலைமை தாங்கி, சம்பவத்தை நிகழ்த்தியது விசாரணையில் தெரியவந்தது.அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில், பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக, நிர்மலாதேவி என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார்.


latest tamil news



நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொலை குற்றங்கள் அதிகரித்து வந்தன. இதனால், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை டி.ஜி.பி., சைலேந்திர பாபு முடுக்கி விட்டார். மாநிலம் முழுதும் போலீசார், இரவோடு இரவாக ரவுடிகளின் வீடு மற்றும் பதுங்கி இருக்கும் இடங்கள் என பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.கடந்த 23ம் தேதி நள்ளிரவில் இருந்து, 52 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், ரவுடிகள், கூலிப்படையினர், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டோர், பழைய குற்றவாளிகள் என 21 ஆயிரத்து 592 பேரிடம் விசாரணை நடந்தது.தொடரும்அவர்களில் 3,325 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில், நீதிமன்றத்தால் தடையாணை பிறப்பிக்கப்பட்ட 294 பேர் உட்பட 972 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று 2,353 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.ஏற்கனவே சில வழக்குகளில் சிக்கிய, ஓராண்டுக்கு மேலாக எவ்வித குற்றங்களிலும் ஈடுபடாமல் இருந்த 173 பேர், போலீசாரின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து, ஏழு நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள், ஈட்டி என 1,110 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறுகையில், ''கொலை குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதிரடி நடவடிக்கைகள் அடுத்தடுத்து தொடரும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
27-செப்-202117:02:51 IST Report Abuse
DVRR நேற்று காலையில் தான் 3325 ரவுடிகள் பிறந்தனர் இன்று அவர்களை உடனே கைது செய்தனர் அப்படித்தானே????1967 ளிலிருந்து ரவுடி ராஜ்ஜியம் தான் நடக்கின்றது இப்போ திடீர் என்று பிடித்து விட்டார்களாம்???பிடித்து என்ன செய்யப்போகின்றார்கள் ஜெயிலில் பிறகு விடுதலை பிறகு அவன் அவன் தொழிலில் மறுபடி பிசி அவ்வளவு தானே "தவறு கண்டேன் சுட்டேன்" செய்யுங்கள் பார்க்கலாம்
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
27-செப்-202115:25:56 IST Report Abuse
திரு.திருராம் விரைவில் சைலேந்திர பாபு விடுவிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட வாய்ப்புண்டு,,,,
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
27-செப்-202113:25:08 IST Report Abuse
Anand நீங்க மாங்கு மாங்குனு உயிரை பணயம் வச்சு கைது செய்யுறீங்க, அந்தாளு விடுதலை செய்கிறான்..... கைதுக்கு பதில் என்கவுண்டர் செய்வது சிறந்தது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X