சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, மாமியாரை திட்டி, தாக்கிய போலீஸ்காரர் கைது

Added : செப் 27, 2021
Share
Advertisement
பெரம்பலுார் : பெரம்பலுாரில், மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.பெரம்பலுார், துறைமங்கலத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏட்டு சக்திவேல் மகள் அமுதா 20.இவருக்கும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் வீரமணி 28, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு காரணமாக

பெரம்பலுார் : பெரம்பலுாரில், மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலுார், துறைமங்கலத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏட்டு சக்திவேல் மகள் அமுதா 20.இவருக்கும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் வீரமணி 28, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இருவரும், விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் அமுதா வீட்டுக்கு சென்ற வீரமணி, அமுதாவையும், அவரது தாய் செல்வியையும் தகாத வார்த்தையால் திட்டி, தாக்கிஉள்ளார். அவர்களது புகார்படி, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, வீரமணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X