புறநகர் தடுப்பூசி முகாம்களில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் தடுப்பூசி முகாம்களில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு

Added : செப் 27, 2021
Share
தாம்பரம்-சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை, தமிழக தலைமை செயலர் இறையன்பு நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுதும் நேற்று, 'மெகா' தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை, தமிழக தலைமை செயலர் இறையன்பு பார்வையிட்டார். பல்லாவரம்

தாம்பரம்-சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை, தமிழக தலைமை செயலர் இறையன்பு நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுதும் நேற்று, 'மெகா' தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை, தமிழக தலைமை செயலர் இறையன்பு பார்வையிட்டார். பல்லாவரம் பஸ் நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த, அவர், நகராட்சி பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, தடுப்பூசி செலுத்த வந்த, மூதாட்டி ஒருவர், தனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என புகார் அளித்தார்.

இதையடுத்து, மூதாட்டிக்கு, உடனடியாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.குரோம்பேட்டை அடுத்த, நெசமிலிச்சேரி ஏரியை பார்வையிட்ட தலைமை செயலர், அங்குள்ள ஏரிக்கரை சாலை சீரமைக்கப்படாமல், மண் சாலையாக இருப்பதை பார்த்து, அதை சீரமைக்காத அதிகாரிகளுக்கு, 'டோஸ்' விட்டார். பின், கிழக்கு தாம்பரத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஆய்வு செய்தார்.அதை தொடர்ந்து, சேலையூரில் உள்ள, தாம்பரம் நகராட்சி பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X