பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் மீது விசாரணை நடத்தப்படுமா?

Added : செப் 27, 2021
Share
Advertisement
பெண் காவலருக்கு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வெளியான புகார் குறித்து, குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.குரோம்பேட்டை காவல் நிலையத்தில், கணினி பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவரிடம், அந்த காவல் நிலையத்தில், சட்டம் - -ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் முருகன் என்பவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.இது

பெண் காவலருக்கு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வெளியான புகார் குறித்து, குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

குரோம்பேட்டை காவல் நிலையத்தில், கணினி பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவரிடம், அந்த காவல் நிலையத்தில், சட்டம் - -ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் முருகன் என்பவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.இது குறித்து, தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில், பெண் காவலர் புகார் அளித்த நிலையில், தாம்பரம், உதவி கமிஷனர் சீனிவாசன் இருதரப்பிடமும் விசாரணை நடத்தி உள்ளார்.

இந்நிலையில், புகார் தெரிவித்த பெண் காவலர், மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதால், அவர், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கே, உரிய பாதுகாப்பில்லாத வகையில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து, மீண்டும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என, சக பெண் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X