பொது செய்தி

தமிழ்நாடு

சென்ட்ரலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் வேகம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு!சென்ட்ரலில் இருந்து வரும் பயணியர், பூந்தமல்லி சாலையை கடந்து செல்வதற்கு, சென்ட்ரல் முன்பாக, ஏற்கனவே ஒரு சுரங்கப்பாதை உள்ளது. இப்பாதை புதுப்பிக்கப்பட்டு, பயணியர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.இந்த சுரங்கப்பாதையின், இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபாரிகள் கடை விரித்துள்ளனர். சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதியில்,

ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு!சென்ட்ரலில் இருந்து வரும் பயணியர், பூந்தமல்லி சாலையை கடந்து செல்வதற்கு, சென்ட்ரல் முன்பாக, ஏற்கனவே ஒரு சுரங்கப்பாதை உள்ளது. இப்பாதை புதுப்பிக்கப்பட்டு, பயணியர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.இந்த சுரங்கப்பாதையின், இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபாரிகள் கடை விரித்துள்ளனர். சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதியில், போக்குவரத்து போலீசாரின் உதவி மையம் இருந்தும், வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு தொடரவே செய்கிறது. இந்த சுரங்கப்பாதை, இரவு, 8:30 மணியுடன் மூடப்படுவதால், சென்ட்ரலில் இருந்து வருபவர்களும், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் இருந்து, சென்ட்ரல் செல்பவர்களும், பூந்தமல்லி சாலையை ஆபத்தான வகையில் கடக்கின்றனர். விபத்து, உயிரிழப்பை தவிர்க்க, சிக்னல் பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும் என, பயணியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் - சென்னை சென்ட்ரல் -ராஜிவ்காந்தி மருத்துவமனை இடையேயான மெட்ரோ சுரங்கப்பாதை பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணியர் அதிகரிப்புசென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் கீழ், மெட்ரோ நிறுவனத்தால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 2020 மார்ச்சில் துவங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு, வேலை ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இந்த பணி மூன்று மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, சுரங்கப்பாதை பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.தற்போது, புறநகர்,எக்ஸ்பிரஸ் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணியர் வரத்து அதிகரித்துள்ளது. நம்பிக்கைரயில் நிலையங்களில் இருந்தும், பஸ்களில் இருந்தும், சாலையை கடக்கும் பயணியரால், சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, அப்பகுதியில் மெட்ரோ நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் சுரங்கப்பாதை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ராஜிவ்காந்தி மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் முன்புறம் இருந்து, இந்த சுரங்கப்பாதைக்கு செல்வதற்கு ஏதுவாக, சுரங்க படிக்கட்டுகள் கட்டுமானப்பணி முடிந்துள்ளது. நகரும் மின் ஏணிகள் நிறுவும் பணி, இரவு, பகலாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் முழு பணியையும் முடித்து, சுரங்காப்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X