பொது செய்தி

தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாய தாமரை பொ.ப.துறை நடவடிக்கை எப்போது?

Added : செப் 27, 2021
Share
Advertisement
செம்பரம்பாக்கம்-செம்பரம்பாக்கம் ஏரியில், அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள், செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானது. 6,300 ஏக்கர் பரப்பளவில் பரந்து, விரிந்து காணப்படும் இந்த ஏரி, 3.6 டி.எம்.சி., கொள்ளளவு உடையது; நீர்மட்டம் 24 அடி.இந்த ஏரி நீரை நம்பி, திருமுடிவாக்கம், பழந்தண்டலம்

செம்பரம்பாக்கம்-செம்பரம்பாக்கம் ஏரியில், அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள், செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானது. 6,300 ஏக்கர் பரப்பளவில் பரந்து, விரிந்து காணப்படும் இந்த ஏரி, 3.6 டி.எம்.சி., கொள்ளளவு உடையது; நீர்மட்டம் 24 அடி.இந்த ஏரி நீரை நம்பி, திருமுடிவாக்கம், பழந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில், 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது.தற்போது ஏரியில் நீர் நிரம்பி கடல் போல் ரம்மியமாக காட்சிஅளிக்கிறது.அதே நேரத்தில், ஏரியின் கோபுர பகுதியில், ஆகாய தாமரை அடர்ந்து வளர்ந்துள்ளது.கரையில், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அவற்றை கண்டுக்கொள்ளாமல் விட்டால், நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.எனவே, பொதுப்பணித் துறையினர் தலையிட்டு, கோபுரத்தை சுற்றியுள்ள ஆகாய தாமரை மற்றும் கரையில் உள்ள புதர்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X