பொது செய்தி

தமிழ்நாடு

'மெட்ரோ' ரயில் புதிய பாதை பள்ளம் தோண்டும் பணி துவக்கம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
சென்னை-கோடம்பாக்கம், ராம் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே, மெட்ரோ புதிய பாதை பணிக்கான, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.இப்பாதை மற்றும் நிலையங்கள்

சென்னை-கோடம்பாக்கம், ராம் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே, மெட்ரோ புதிய பாதை பணிக்கான, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.இப்பாதை மற்றும் நிலையங்கள் அமைப்பதற்கு, நான்கு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்களின் சார்பில், இப்பாதையில் பல பிரிவுகளாக, ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக, கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - சாலிகிராமம், 80 அடி சாலை வரை பாதை அமைக்கும்போது, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பவர்ஹவுசில் இருந்து சாலிகிராமம் 80 அடி சாலை வரை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, கடந்த 14ம் தேதி பவர்ஹவுஸ் அருகே ஆரம்பகட்ட பணி துவங்கியது.

பவர்ஹவுஸ் - சாலிகிராமம் இடையே, பவர்ஹவுஸ், வடபழநி மற்றும் சாலிகிராமத்தில் மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.இப்பாதையில் ராம் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே, மெட்ரோ ரயில் பாதைக்காக சிமென்ட் துாண் அமைக்க ஏதுவாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி இரு நாட்களுக்கு முன் துவக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X