பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021
Share
Advertisement
சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.அதன்படி, 23 ஆயிரத்து 998 இடங்களுக்கு, 79 ஆயிரத்து 433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்., 6, 9ல் தேர்தல் நடக்கிறது. மொத்தம், 27 ஆயிரத்து மூன்று பதவிகளுக்கு தேர்தல்

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.



latest tamil news


அதன்படி, 23 ஆயிரத்து 998 இடங்களுக்கு, 79 ஆயிரத்து 433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்., 6, 9ல் தேர்தல் நடக்கிறது. மொத்தம், 27 ஆயிரத்து மூன்று பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கொளத்துார் ஊராட்சி தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 27 ஆயிரத்து இரண்டு பதவிகளுக்கு 98 ஆயிரத்து 151 மனுக்கள் பெறப்பட்டன.

அதில், 1,166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன; 14 ஆயிரத்து 571 பேர் மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. போட்டியின்றி 2,981 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு ஊராட்சி தலைவர்; 21 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23 ஆயிரத்து 998 பதவிகளுக்கு போட்டியிட 79 ஆயிரத்து 433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அதிகபட்சமாக 22 ஆயிரத்து 581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியை கைப்பற்ற, 61 ஆயிரத்து 750 பேர்; 2,901 ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்ற 10 ஆயிரத்து 792 பேரும் களத்தில் உள்ளனர்.


latest tamil news


இதேபோல 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற 6,064 பேர்; 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற 827 வேட்பாளர்களும் களத்தில் நிற்கின்றனர். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் அக்., 9ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக 2,547 மனுக்கள் பெறப்பட்டன; அதில், 80 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. போட்டியின்றி 365 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு ஊராட்சி தலைவர், நான்கு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இறுதியாக 418 பதவிகளுக்கு 1,386 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X