பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
செப்., 27, 1972நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில், 1892ல் பிறந்தவர், எஸ்.ஆர்.ரங்கநாதன். மங்களூர், கோவை, சென்னை பல்கலைகளில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றினார்.கடந்த 1924ல் சென்னை பல்கலை நுாலகராக நியமிக்கப்பட்டார். லண்டன் சென்று, நுால்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார். நாடு திரும்பியதும், பல்கலை நுாலகத்தை மறுசீரமைக்க துவங்கினார்; சென்னை
 இதே நாளில் அன்று

செப்., 27, 1972

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில், 1892ல் பிறந்தவர், எஸ்.ஆர்.ரங்கநாதன். மங்களூர், கோவை, சென்னை பல்கலைகளில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றினார்.கடந்த 1924ல் சென்னை பல்கலை நுாலகராக நியமிக்கப்பட்டார். லண்டன் சென்று, நுால்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார். நாடு திரும்பியதும், பல்கலை நுாலகத்தை மறுசீரமைக்க துவங்கினார்; சென்னை நுாலக சங்கத்தை நிறுவினார். 'ஸ்கூல் ஆப் லைப்ரரி சயின்ஸ்' அமைப்பை துவக்கி, அதன் இயக்குனராக 15 ஆண்டுகள் பணியாற்றினார்.

60-க்கு மேற்பட்ட நுால்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை பல மொழிகளில் எழுதி உள்ளார். பனாரஸ் ஹிந்து பல்கலையில் நுாலக அமைப்பை மேம்படுத்தும் பணியில் சேர்ந்து, தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நுால்களை வகைப்படுத்தினார்.'நுாலக அறிவியல்' பட்டய படிப்பை அறிமுகம் செய்து, தானே கற்பித்தார்.

இந்திய நுாலக சங்க தலைவராக நியமிக்கப்பட்டார். ஆவணங்கள் பதிவு ஆராய்ச்சி மையம், இந்திய புள்ளியியல் நிறுவனம் ஆகிய அமைப்புகளை நிறுவினார். 'பத்மஸ்ரீ' உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.கடந்த 1972 செப்., 27ல் தன் 80வது வயதில் இயற்கை எய்தினார். எஸ்.ஆர்.ரங்கநாதன் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aravintraj Lalitha - Srivilliputtur,இந்தியா
27-செப்-202107:08:09 IST Report Abuse
Aravintraj Lalitha "கோலன்" எனும் நுால்களை வகைப்படுத்தும் புதிய கோட்பாட்டை உருவாக்கி உலகிற்கு தந்தவர் . இந்திய நுலகவியல் தந்தை என போற்றப்படுபவர்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-செப்-202106:44:18 IST Report Abuse
Bhaskaran இப்போ பணியில் இருக்கும் அரசு நூலகர்களுக்கு இவரை பற்றி தெரிந்திருக்குமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X