தாய், மகனுக்கு கத்திக்குத்து இருவருக்கு போலீஸ் வலை | Dinamalar

தாய், மகனுக்கு கத்திக்குத்து இருவருக்கு போலீஸ் வலை

Added : செப் 27, 2021
Share
புதுச்சேரி-பூனைகுட்டியை துாக்கி சென்றது தொடர்பான தகராறில் தாய், மகனை கத்தியால் குத்திய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.முத்தியால்பேட்டை, குட்டி கிராமணி வீதியை சேர்ந்தவர் தனசேகரன், 63; காஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்தியவதி, 55.இவர் வீட்டில் பூனைக்குட்டிகள் வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன், சத்தியவதி வீட்டில் இருந்த பூனை குட்டியை

புதுச்சேரி-பூனைகுட்டியை துாக்கி சென்றது தொடர்பான தகராறில் தாய், மகனை கத்தியால் குத்திய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.முத்தியால்பேட்டை, குட்டி கிராமணி வீதியை சேர்ந்தவர் தனசேகரன், 63; காஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்தியவதி, 55.இவர் வீட்டில் பூனைக்குட்டிகள் வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன், சத்தியவதி வீட்டில் இருந்த பூனை குட்டியை துாக்கிச் சென்றது தொடர்பாக இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை வனத்துராஜ், 45; சிறிய கத்தியால் சத்தியவதி, அவரது மகன் மேகநாதனை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புகாரின்பேரில், வனத்துராஜ் உள்ளிட்ட இருவர் மீது முத்தியால்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X