இந்தியா

'நோட்டா'வுடன் மல்லுக்கட்டி தோற்றால்...நகராட்சி, பஞ்சாயத்து விதிகளில் திருத்தம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில், நிழல் வேட்பாளராக 'நோட்டா' களம் இறங்குகிறது. வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக ஓட்டு பதிவாகியிருந்தால், மறு தேர்தல் நடத்த, நகராட்சி, கொம்யூன்பஞ்சாயத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தலில், முதல் முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.மேலும்,
 'நோட்டா'வுடன் மல்லுக்கட்டி தோற்றால்...நகராட்சி, பஞ்சாயத்து விதிகளில் திருத்தம்

புதுச்சேரி-புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில், நிழல் வேட்பாளராக 'நோட்டா' களம் இறங்குகிறது. வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக ஓட்டு பதிவாகியிருந்தால், மறு தேர்தல் நடத்த, நகராட்சி, கொம்யூன்பஞ்சாயத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தலில், முதல் முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.மேலும், உள்ளாட்சி தேர்தலில், 'நோட்டா'வுக்கு ஓட்டளிக்கும் முறையும் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.அதாவது, எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை தெரிவிக்க, 'நோட்டா' என்ற பட்டனை அழுத்தி பதிவு செய்யலாம்.இதன்படி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத் தின் கடைசி பட்டன், 'நோட்டா' ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விதிமுறைகளில் மாநில தேர்தல் ஆணையம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.உள்ளாட்சி தேர்தலில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் நோட்டா சின்னம், 'இவர்களில் எவரும் இல்லை' என்ற வாசகத்துடன் தமிழிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.இதே வாசகம், மாகி பிராந்தியத்தில் மலையாளத்திலும், ஏனாம் பிராந்தியத்தில் தெலுங்கிலும் குறிப்பிடப்பட உள்ளது.

போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெறுவோருக்கு 'டெபாசிட்' தொகை திரும்ப கிடைக்கும்.இந்த டெபாசிட் கணக்கீட்டிற்கு, நோட்டா ஓட்டு கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.விதிமுறை திருத்தத்தின் முக்கிய அம்சமாக, உள்ளாட்சி தேர்தலில் கற்பனையான நிழல் வேட்பாளராக நோட்டா கருதப்பட உள்ளது.ஓட்டு எண்ணிக்கையின் போது, நோட்டாவும், ஒரு வேட்பாளரும் மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் சரிசமமான ஓட்டுகளை பெற்றிருந்தால், நோட்டாவுக்கு இணையாக ஓட்டு பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

ஒருவேளை வேட்பா ளர்கள் அனைவரும் நோட்டாவை விட குறைவான ஓட்டுகள் பெற்றிருந்தால், ஒருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட மாட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் மறு தேர்தல் அறிவிக்கப்படும்.தேர்தல் நடத்தும் அதிகாரி, ஓட்டு எண்ணிக்கையை முழுவதுமாக முடித்தால் கூட, நோட்டா ஓட்டு அதிகம் பெற்ற வார்டு ரிசல்ட்டை வெளியிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.நோட்டா அதிக ஓட்டுகள் பெற்றதை, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.மாநில தேர்தல் ஆணையம் ஆராய்ந்து, நோட்டா அதிக ஓட்டு பெற்ற வார்டுக்கு, மறு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடும். நோட்டாவுடன் போட்டியிட்டு தோற்ற அனைத்து வேட்பாளர்களும், இந்த மறுதேர்தலில் அதே வார்டில் போட்டியிட முடியாது.மறு தேர்தலிலும், மற்ற வேட்பாளர்களைவிட நோட்டா அதிக ஓட்டுகள் பெற்றால், மீண்டும் மறு தேர்தல் நடத்தப்படாது.நோட்டாவுக்கு அடுத்த நிலையில் அதிக ஓட்டு பெற்றவர் மறு தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு வார்டிலும் 1000 வாக்காளர்கள் வரை இருப்பர்.ஆனால் உள்ளாட்சி தேர்தல் வார்டுகளில், அதிக பட்சம் 800 ஓட்டுகள் வரை மட்டுமே இருக் கும். எனவே, வார்டுகளில் வேட்பாளர்களுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் மிகவும் முக்கியம்.இதுபோன்ற சூழ்நிலையில், 'நோட்டா' வரவு, வார்டுகளில் மக்கள் செல்வாக்கு இல்லாமல் போட்டியிடுபவர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

சாயம் வெளுத்துவிடும்சட்டசபை, லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'நோட்டா' வைக்கப்பட்டு இருந்தாலும், அது, கணிசமான ஓட்டு களுடன் கடந்துபோய் விடும். ஆனால் உள்ளாட்சி தேர்தலில், நிழல் வேட்பாளராக களம் இறங்க உள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் 'பந்தா' காட்ட போட்டியிடும் பிரமுகர்களின் சாயம் வெளுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X