பொது செய்தி

இந்தியா

பிரதமரின் உரையாடல் வீராம்பட்டினத்தில் ஒலிபரப்பு

Added : செப் 27, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-பிரதமர் மோடி வானொலியில் நிகழ்த்திய உரையை, வீராம்பட்டினம் கடற்கரையில் அமர்ந்து மீனவர்கள் கேட்டனர்.பிரதமர் மோடி, 'மன் கீ பாத்' என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில், வானொலி மூலம் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.10 மாநிலங்களில் ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, வானொலி மூலம் பிரதமர் மோடியின் உரையாடலை

அரியாங்குப்பம்-பிரதமர் மோடி வானொலியில் நிகழ்த்திய உரையை, வீராம்பட்டினம் கடற்கரையில் அமர்ந்து மீனவர்கள் கேட்டனர்.பிரதமர் மோடி, 'மன் கீ பாத்' என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில், வானொலி மூலம் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.10 மாநிலங்களில் ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, வானொலி மூலம் பிரதமர் மோடியின் உரையாடலை கேட்டனர்.புதுச்சேரியில் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பிரதமரின் உரையை கேட்க, வீராம்பட்டினம் கடற்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மீனவர்கள் அங்கு அமர்ந்து, அகில இந்திய வானொலி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய நேரடி உரையாடலை கேட்டனர். பிரதமரின் உரையில், நதிகள் மாசுபடுவதை தடுத்து, துாய்மையாக வைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை இடம் பெற்றன. மாநில மீனவர் அணி தலைவர் பழனி, துணை தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X