நல்லவாடு மீனவர்களுக்காக தயாரித்த வீச்சரிவாள்கள் பறிமுதல்

Added : செப் 27, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-மீனவர்களுக்காகதயாரிக்கப்பட்ட 32 வீச்சரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பட்டறை உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டினம் - நல்லவாடு மீனவர்கள், ஆயுதங்களுடன் திரண்டு, கடந்த ஆக., 28ம் தேதி புதுக்குப்பம் கடற்கரையில் மோதிக் கொண்டனர்.தொடர்ந்து, மோதலின் போது பயன்படுத்தபட்டறையில்

அரியாங்குப்பம்-மீனவர்களுக்காகதயாரிக்கப்பட்ட 32 வீச்சரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பட்டறை உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டினம் - நல்லவாடு மீனவர்கள், ஆயுதங்களுடன் திரண்டு, கடந்த ஆக., 28ம் தேதி புதுக்குப்பம் கடற்கரையில் மோதிக் கொண்டனர்.தொடர்ந்து, மோதலின் போது பயன்படுத்தபட்டறையில் தயாரிக்கப்பட்ட 280 ஈட்டிகளை முதலியார்பேட்டை போலீசார் பறிமுதல் செய்து,4 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு அருகே அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார்வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 10 வீச்சரிவாள்கள் இருந்தன.விசாரணையில், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ், 29; கொம்பாக்கத்தை சேர்ந்த பட்டறை உரிமையாளர் கருணாதாஸ், 24; என தெரியவந்தது.நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் கூறியதன்பேரில், ரூ. 28 ஆயிரம் முன் பணம் பெற்று வீச்சரிவாள்களை தயாரித்தது தெரிந்தது.அதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் கொம்பாக்கம் பட்டறையில் சோதனை செய்தனர். மொத்தம் 32 வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக, ராஜேஷ், கருணாதாஸ்,மணவெளி ஜெய சூர்யா, 19; லாஸ்பேட்டை ஜாக்பால், 19; சிவலிங்க புரம் மணிகண்டன், 21; குமர குருபள்ளம் அஜித், 22; ஆகிய 6 பேரை கைது செய்தனர்.மோட்டார் பைக், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நல்லவாடு மீனவர் சுகுமார் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X