புதிதாக 78 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு இருவர் பலி

Added : செப் 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி--புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 78 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவால் இருவர் இறந்தனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,677 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 78 பேருக்கு தொற்று உறுதியானது.இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம்107 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த

புதுச்சேரி--புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 78 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவால் இருவர் இறந்தனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,677 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 78 பேருக்கு தொற்று உறுதியானது.இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம்107 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த னர்.அதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 351 ஆக உயர்ந்தது.திருபுனையில் 55 வயது நபர், காரைக்காலில் 57 வயது நபர் என இருவர் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனா இறப்பு 1838 ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 119 பேர், வீட்டு தனிமையில் 782 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 6,81,362 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 2,90,575 பேரும் போட்டுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X