பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய இசைக் கருவிகளுடன் களைகட்டிய கீழடி அகழாய்வு தளம் பார்த்து மகிழ்ந்த மக்கள்

Added : செப் 27, 2021
Share
Advertisement
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு தளத்தை நேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.தென்தமிழக சுற்றுலா முகவர்கள் சார்பில் 'கீழடிக்கு வாங்க,'என்ற பெயரில் நேற்று ஒரு நாள் அகழாய்வு தளத்தை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பாரம்பரிய இசை கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட, சிலம்பாட்டம்,இசை கச்சேரி களை கட்ட மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட
பாரம்பரிய இசைக் கருவிகளுடன்  களைகட்டிய கீழடி அகழாய்வு தளம்   பார்த்து மகிழ்ந்த மக்கள்


திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு தளத்தை நேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

தென்தமிழக சுற்றுலா முகவர்கள் சார்பில் 'கீழடிக்கு வாங்க,'என்ற பெயரில் நேற்று ஒரு நாள் அகழாய்வு தளத்தை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பாரம்பரிய இசை கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட, சிலம்பாட்டம்,இசை கச்சேரி களை கட்ட மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் அகழாய்வு தளத்தை பார்த்து ரசித்தனர்.கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

இதில் உறைகிணறுகள், பானைஓடுகள், சிவப்பு நிற கொள்கலன், செப்பு பொருட்கள், உள்ளிட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் நாகரிகத்துடனும் கல்வியறிவுடனும் சிறந்து விளங்கியதற்கான இடத்தை நேரில் பார்த்தது பெரும் ஆச்சர்யத்தையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.தொல்லியல் இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், அஜய்,காவ்யா உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X