பொது செய்தி

தமிழ்நாடு

7 மாத கர்ப்பிணி சிலம்பம் சுற்றி சாதனை

Added : செப் 27, 2021
Share
Advertisement
நாமக்கல் : நாமக்கல்லில் ஏழு மாத கர்ப்பிணி, ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.நாமக்கல் ஏகலைவா கலைக்கூடம் சார்பில், கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில், சிலம்பக் கலையில் நேற்று ஐந்து வகையான சாதனைகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சியை, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். முதலாவதாக, 8 வயது சிறுமி சஞ்சனா, 7 அடி உயரத்தில் கம்பின் மேல் ஒரு

நாமக்கல் : நாமக்கல்லில் ஏழு மாத கர்ப்பிணி, ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

நாமக்கல் ஏகலைவா கலைக்கூடம் சார்பில், கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில், சிலம்பக் கலையில் நேற்று ஐந்து வகையான சாதனைகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சியை, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். முதலாவதாக, 8 வயது சிறுமி சஞ்சனா, 7 அடி உயரத்தில் கம்பின் மேல் ஒரு மணி நேரம் நடந்து சிலம்பம் சுற்றியும், ஜித்தேஸ் அஸ்வந்த் என்ற சிறுவன் கண்களைக் கட்டி 7 அடி உயர கம்பின் மீது நடந்தபடியே ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றியும் சாதனை படைத்தனர்.

சினேகா என்ற ஏழு மாத கர்ப்பிணி, தொடர்ந்து ஒரு மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றினார். மோகன்ராஜ் என்ற இளைஞர் 1 கி.மீ., துாரம் ஆணி காலணி அணிந்து நடந்தபடியே சிலம்பம் சுற்றினார். நெருப்பு வளையத்துக்குள் கண்களைக் கட்டி, இரட்டை சிலம்பத்தை ஒரு மணி நேரம் சுழற்றும் சாதனையை மோகனா என்ற வீராங்கனை நிகழ்த்தினார்.இந்த ஐந்து சாதனைகளும், 'கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பின் சார்பாக பதிவு செய்யப்பட்டு, வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X