பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விதை நெல், உரங்கள் இருப்பு திருப்தி

Added : செப் 27, 2021
Share
Advertisement
உடுமலை;அமராவதி பாசன பகுதிகளில், சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில், விதை மற்றும் உரம் தேவையான அளவு இருப்பு உள்ளதாக, வேளாண்துறையினர் தெரிவித்தனர்.காரீப் பருவம் முடிவடைந்த நிலையில், பயிறு வகை பயிறுகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்து பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது.தற்போது துவங்க உள்ள, ராபி பருவ பயிர் சாகுபடி, மாவட்டத்தில், 1.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில்

உடுமலை;அமராவதி பாசன பகுதிகளில், சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில், விதை மற்றும் உரம் தேவையான அளவு இருப்பு உள்ளதாக, வேளாண்துறையினர் தெரிவித்தனர்.காரீப் பருவம் முடிவடைந்த நிலையில், பயிறு வகை பயிறுகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்து பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது.தற்போது துவங்க உள்ள, ராபி பருவ பயிர் சாகுபடி, மாவட்டத்தில், 1.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நெல், சோளம், மக்காச்சோளம் மற்றும் உளுந்து போன்ற பயிறுவகை பயிர்கள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய்வித்து பயிர்களும், மானாவாரி மற்றும் இறவை சாகுபடியாக பயிரிடப்படுகிறது.சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்களில் விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது.நெல், 74 டன், சிறுதானிய பயிறுகள், 81 டன், பயறு வகை பயிறுகள், 28 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள், 15 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அமராவதி அணையிலிருந்து சம்பா பருவத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில், நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா, 1,927 டன், டி.ஏ.பி., 1,584 டன், காம்ப்ளக்ஸ், 4, 910 டன், சூப்பர் பாஸ்பேட் 742 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.தரமான விதை மற்றும் தேவையான அளவு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை, வட்டார வேளாண் அதிகாரிகள் கண்காணிக்கவும், கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என உரக்கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இவ்வாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X