பொது செய்தி

இந்தியா

சர்ச்சையை ஏற்படுத்திய திருமண விளம்பரம்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி,-'கன்னிகாதானம் இந்த காலத்துக்கும் தேவையா' என, மணப்பெண் கேள்வி எழுப்புவதாக வரும் விளம்பரம், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பெண்களின் திருமண ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் அந்த விளம்பரத்தில் மணப்பெண்ணாக நடிக்கிறார். புதிய விவாதம்திருமணம் நடக்கும் நேரத்தில்,

புதுடில்லி,-'கன்னிகாதானம் இந்த காலத்துக்கும் தேவையா' என, மணப்பெண் கேள்வி எழுப்புவதாக வரும் விளம்பரம், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news


பெண்களின் திருமண ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் அந்த விளம்பரத்தில் மணப்பெண்ணாக நடிக்கிறார்.


புதிய விவாதம்

திருமணம் நடக்கும் நேரத்தில், 'ஒரு பெண்ணை தானமாக வழங்கும் பழங்கால நடைமுறை இனியும் வேண்டுமா' என, அந்த விளம்பரத்தில் ஆலியா பட் கேள்வி எழுப்புகிறார். இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் புதிய விவாதத்தையும் துவக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 'பெண்கள் என்ன ஒரு பொருளா, அவர்களை தானமாக வழங்குவதற்கு' என, ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ஹிந்துக்களின் திருமண நடைமுறையில் உள்ள இந்த பாரம்பரியத்தின் அர்த்தத்தை உணராமல், விளம்பரத்தை பிரபலமாக்குவதற்காக சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.


நடைமுறை

கிறிஸ்துவர்கள் திருமணத்திலும் கன்னிகாதானம் நடைமுறை உள்ளதையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒரு பக்கம் சர்ச்சையையும், மற்றொரு பக்கம் விவாதத்தையும் இந்த விளம்பரம் ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



ஹிந்து அமைப்பு போராட்டம்

நடிகை ஆலியா பட் நடித்த விளம்பரம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, பிரபல நிறுவனத்தின் ஆடைகளை விற்பனை செய்து வரும், நவி மும்பையில் உள்ள வேதாந்த் பேஷன்ஸ் முன், ஹிந்து அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விளம்பரத்தை திரும்ப பெறுவதுடன், அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
02-அக்-202115:48:41 IST Report Abuse
Nesan அவர், அவர் சொந்த விஷயம் அதில் அடுத்தவன் தலையிட உரிமை இல்லை.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-செப்-202100:11:54 IST Report Abuse
DARMHAR தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் அவரவர் வகுப்பின் திருமண வழிமுறைகளை மாற்றுவது எளிதான காரியமல்ல.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-செப்-202116:51:43 IST Report Abuse
r.sundaram முஹர், வரதட்சிணை வாங்கினால் விற்பனை என்று அர்த்தமா? அப்படி பார்க்கும்போது தானம் என்பதும் சரிதானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X