பொது செய்தி

தமிழ்நாடு

கோவாவின் 'பெனி' மதுபானம் வரலாற்றை விளக்கும் மியூசியம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
பனாஜி : கோவாவின் பழமை வாய்ந்த 'பெனி' மதுபானத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், பனாஜி கடற்கரையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. 'பெனி' என்ற மதுபானத்தை இங்குள்ள மக்களும், சுற்றுலா பயணியரும் பெரிதும் விரும்புகின்றனர்.முந்திரி மற்றும் தேங்காயில் தயாரிக்கப்படும் இந்த மது வகையை 1950ல்

பனாஜி : கோவாவின் பழமை வாய்ந்த 'பெனி' மதுபானத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், பனாஜி கடற்கரையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. 'பெனி' என்ற மதுபானத்தை இங்குள்ள மக்களும், சுற்றுலா பயணியரும் பெரிதும் விரும்புகின்றனர்.முந்திரி மற்றும் தேங்காயில் தயாரிக்கப்படும் இந்த மது வகையை 1950ல் வினியோகம் செய்த பாட்டில்கள், அவற்றை ஊற்றி வழங்கிய கண்ணாடி குடுவைகள் உள்ளிட்டவை அடங்கிய அருங்காட்சியகம், பனாஜி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு, பழைய மண் பானைகள், 16ம் நுாற்றாண்டில் மது அளவை கணக்கிடும் குடுவை, கண்ணாடி பாத்திரங்கள், பழைய மரப் பெட்டகம், பெனியின் ஆற்றலை அளவிடும் கருவி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டல் கண்ணாடி பீர் பாட்டில் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதன் உரிமையாளர் நந்தன் குட்சாட்கர் கூறியதாவது:மது அருந்துவதை ஊக்குவிப்பது எங்கள் நோக்கமல்ல. பெனி மதுபானம் தயாரிக்கும் பாரம்பரியத்தை காட்சிப்படுத்தவே இந்த முயற்சி. மதுபானத்திற்கான உலகின் முதல் அருங்காட்சியகம் இது என்பதில் பெருமை கொள்கிறேன்.இங்குள்ள பாதாள அறையில், 1950ம் ஆண்டில் பெனி விற்பனை செய்த பாட்டில்கள் ஏராளமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X