பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்க வாக்காளராக பிரசாந்த் கிஷோர் பதிவு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோல்கட்டா-தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தன்னை மேற்கு வங்க வாக்காளராகப் பதிவு செய்துள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., கட்சிக்கு வியூகங்களை வகுத்துத் தந்தவர் பிரசாந்த் கிஷோர். பிரசாரத்தின் போது தேர்தல் பணிகளில் ஈடுபட

கோல்கட்டா-தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தன்னை மேற்கு வங்க வாக்காளராகப் பதிவு செய்துள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.



latest tamil news


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., கட்சிக்கு வியூகங்களை வகுத்துத் தந்தவர் பிரசாந்த் கிஷோர். பிரசாரத்தின் போது தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டி இருந்ததால், மேற்கு வங்கத்திலேயே வசித்து வந்தார்.இந்நிலையில் தன்னை மேற்கு வங்க வாக்காளராக பிரசாந்த் கிஷோர் பதிவு செய்துள்ளது தெரிய வந்துஉள்ளது.


latest tamil news


நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோர் ஓட்டு போட்டதும் தெரிய வந்துள்ளது.சட்டசபை தேர்தலின்போது அவரை மாநிலத்தில் இருந்து வெளியேற்ற, தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., முறையிட வாய்ப்பிருந்ததால், அதை கருத்தில் வைத்து பிரசாந்த் கிஷோர், தன்னை மேற்கு வங்க வாக்காளராக பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், அங்குள்ள சாசரம் மாவட்டத்தின் வாக்காளராக இதற்கு முன்பு வரை இருந்து வந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
27-செப்-202116:19:52 IST Report Abuse
DVRR பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், அங்குள்ள சாசரம் மாவட்டத்தின் வாக்காளராக???அதானே பார்த்தேன் என்ன பிஹாரி என்று தினம் தினம் வந்ததே என்று???? முஸ்லீம் பேகம் மும்தாஜ் பதவி இழந்தால் அவர் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி வந்துவிடும் என்று சொல்வது போல மேலே குறிப்பிட்ட பீஹாரியின் கதை உள்ளது.
Rate this:
Cancel
27-செப்-202109:57:02 IST Report Abuse
அருணா சக்கர நாற்காலி வைத்தே சக்கர வியூகம் அமைப்பார் கோடிகளை வீசினால்.வேட்பாளருக்கு தகுதி இல்லை என்றாலும்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-செப்-202109:16:02 IST Report Abuse
அசோக்ராஜ் மகாபாரத சகுனி கலியுகத்துல பிறந்துட்டான்-னு தெரியுது. கிஷ்ண பரமாத்மா எங்கே அவதரிச்சிருக்காரோ? சம்பவாமி யுகே... யுகே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X