பொது செய்தி

இந்தியா

கரையை கடந்தது 'குலாப்' புயல்

Added : செப் 27, 2021
Share
Advertisement
விசாகப்பட்டினம் : வங்கக் கடலில் உருவான, 'குலாப்' புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி விசாகப்பட்டினம் -- கோபால்பூர் இடையே நேற்றிரவு கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கன மழை பெய்தது. வங்கக் கடல் பகுதியில் ௨௪ல் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது; இது புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து,
 கரையை கடந்தது 'குலாப்' புயல்

விசாகப்பட்டினம் : வங்கக் கடலில் உருவான, 'குலாப்' புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி விசாகப்பட்டினம் -- கோபால்பூர் இடையே நேற்றிரவு கரையை கடந்தது.

இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கன மழை பெய்தது. வங்கக் கடல் பகுதியில் ௨௪ல் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது; இது புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரம் இடையே, நேற்று காலை மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு 'குலாப்' என, பாகிஸ்தான் பெயர் சூட்டியது. குலாப் புயல், வடக்கு ஆந்திரா மற்றும் -தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டி விசாகப்பட்டினம் -- கோபால்பூர் இடையே நேற்று மாலை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்யத் துவங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிசா, ஆந்திர அரசுகள் முழு வீச்சில் மேற்கொண்டன.புயல் காரணமாக ஒடிசாவில் பலத்த மழை பெய்து வரும், ௧௧ மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக தொடர்பு கொண்டு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டறிந்தார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை டெலிபோனில் தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என, அவர்களிடம் பிரதமர் உறுதிஅளித்தார்.

ஒடிசாவில் 42 பேரிடர் அதிரடி விரைவு படை குழுக்கள், 24 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மற்றும் 103 மாநில தீயணைப்பு துறை படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். மீனவர்கள் பலிஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் புதிய படகு வாங்க ஒடிசாவுக்கு சென்றிருந்தனர். புதிய படகு வாங்கிக் கொண்டு அதில் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தங்கள் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.பலத்த காற்றுபடகில் பயணம் செய்த ஒருவர், தங்கள் குடும்பத்தினரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, 'பலத்த காற்றில் கடலில் படகு கவிழ்ந்து விட்டது. ஐந்து பேரும் கடலில் மூழ்கிவிட்டனர்' என, தெரிவித்துள்ளார். அதன்பின் அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரண்டு மீனவர்கள் இறந்து விட்டதாக ஆந்திர அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.ஆந்திர கடலோர பகுதிகளில் வசித்த, 1,000த்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், குலாப் புயல் நேற்று இரவு விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடந்தது.

அப்போது மணிக்கு ௧௦௦ கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ஒடிசா, ஆந்திராவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைதமிழகத்தின் ஆறு மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களின், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன், கனமழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன், கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 29, 30ம் தேதிகளில் மாநிலம் முழுதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், 13 செ.மீ., மழை பெய்து உள்ளது. சென்னையில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X