உ.பி., தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி ; கடும் கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
லக்னோ-உத்தர பிரதேச சட்டசபைக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் நடக்க உள்ள தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி போட்டியிட உள்ளது. இதனால், முஸ்லிம்களின் ஓட்டு களை நம்பியுள்ள கட்சிகள் சற்று கலக்கத்தில் உள்ளன.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த

லக்னோ-உத்தர பிரதேச சட்டசபைக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் நடக்க உள்ள தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி போட்டியிட உள்ளது. இதனால், முஸ்லிம்களின் ஓட்டு களை நம்பியுள்ள கட்சிகள் சற்று கலக்கத்தில் உள்ளன.



latest tamil news


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தங்கள் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் ஓவைசி அறிவித்துள்ளார். ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் அவர் கூட்டணி அமைத்து உள்ளார்.

இது குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 சதவீதமாக உள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கே முஸ்லிம்களின் ஓட்டுகள் கிடைத்து வருகின்றன. ஆனால், முஸ்லிம்களுக்கு அந்த கட்சிகளில் பெரிய அளவில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பது ஓவைசி கட்சியின் வாதம்.


latest tamil news


முஸ்லிம்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாக ஓவைசி கூறி உள்ளார். ஆனால், அவரது இந்த வாதம் இங்கு எடுபடுமா என்பது சந்தேகமே. இருந்தாலும், தங்கள் கட்சிக்கான ஓட்டுகள் பாதிக்கப்படலாம் என, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
27-செப்-202122:08:21 IST Report Abuse
mathimandhiri இந்த ஆள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்பில் எத்தகைய உறுதி மொழியை ஏற்றான்///இங்குள்ள முஸ்லிம்களை ஒன்று சேர்த்து பாகிஸ்தானோடு சேர்ந்து இந்தியாவை தாக்குவோம் என்று பகிரங்கமாக மிரட்டுகிறான்///, இவனை எந்த சட்டத்தின் அடிப்படையில் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று அறிந்தவர்கள் கூறினால் நலம்///
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
27-செப்-202122:04:08 IST Report Abuse
mathimandhiri i ........
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
27-செப்-202117:59:18 IST Report Abuse
sridhar How will the opposition canvass against ovaisi . ஏதாவது தப்பா பேசினால் இஸ்லாமியர்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடும் . அதர்ம சங்கடம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X