பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சிக்க மாட்டார்கள்!

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டும் என கூறிய தி.மு.க., இப்போது ஆளுங்கட்சியாக வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?' என்று நியாயம் கேட்கிறார், தமிழக பா.ஜ., தலைவர்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டும் என கூறிய தி.மு.க., இப்போது ஆளுங்கட்சியாக வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?' என்று நியாயம் கேட்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.latest tamil news


எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட செய்வோம்' என்பது போல எத்தனையோ வாக்குறுதிகளை, தி.மு.க., அள்ளி வீசி இருக்கிறது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் கூட, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்வோம்' என கூறியிருந்தது.ஆட்சிக்கு வந்ததும் என்ன ஆனது, 'அது சாத்தியம் இல்லை' என கையை விரித்து விட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன்.

காரணம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால், தமிழக அரசின் கஜானா காலியாகி விடுமாம்.'நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்வோம்' என மேடைதோறும் முழங்கினர், தி.மு.க.,வினர். ஆட்சிக்கு வந்ததும், 'நீட் தேர்வை துணிந்து எழுதுங்கள்' என்கின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த ஏழு கொலையாளிகளை விடுதலை செய்ய, தி.மு.க., எடுத்த முயற்சிகள் எல்லாம், 'அம்பேல்' ஆகி விட்டன.

'இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என்ற வாக்குறுதியும், 'போண்டி' ஆகி விட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது, தமிழக மக்களுக்கு சேவை செய்ய அல்ல; முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் அழகிய நினைவு மண்டபம் கட்டவும், அவர் பெயரில் நுாலகம் அமைக்கவும் தான்.இது புரியாமல், 'நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு' என மக்கள் கேட்டால், 'அது வேற வாய்; இது நாற வாய்' என, காமெடி நடிகர் வடிவேலு பாணியில் பதில் சொல்வர், தி.மு.க.,வினர்.


latest tamil news


'குடி'காரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல, அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள், ஆட்சியில் அமர்ந்ததும் காணாமல் போய் விடும்.உறுதியாக ஒன்றை மட்டும் சொல்லலாம். ஐந்து ஆண்டுகள் முடிவில், தி.மு.க., அமைச்சர்கள் தங்கள் சொத்தை 1,000 சதவீதம் உயர்த்தி இருப்பர். விஞ்ஞான ரீதியாக கொள்ளை அடிப்பதால், அவ்வளவு சுலபமாக சிக்கி கொள்ளவும் மாட்டார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
28-செப்-202101:44:24 IST Report Abuse
John Miller வெளிநாட்டுக்கு ஓடிவிட்டு அங்கிருந்து தமிழகத்தை கவலைப்படுவது இங்கே அதிகம்
Rate this:
Cancel
Mohan - Salem,இந்தியா
27-செப்-202118:52:06 IST Report Abuse
Mohan செய்திக்கான விமரிசனத்தை விடுத்து தமது சொந்த விருப்பு வெறுப்புகளை பிரகடனப்படுத்தும் விதமாக கருத்துக்களை எழுதி அனுப்புவதை தயவு கூர்ந்து கத்திரி போடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஊடகத்தில் எழுதப்படும் கருத்துக்கள் கூர்மையாகவும் அர்த்தமுள்ளவையாகவும் இருந்தால் தான் நன்று. சும்மா பாத்திரங்கள் உருட்டும் வகையாக இருந்தால் எந்த பிரயோசனமும் இல்லை.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-செப்-202117:12:57 IST Report Abuse
Rajas ///ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டும் என கூறிய தி.மு.க., இப்போது ஆளுங்கட்சியாக வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?'///// கேஸ் GST வரம்பில் தான் இருக்கிறது. ஆனால் அதன் விலை ஏன் கூடி கொண்டே போகிறது, இதற்கு பதில் சொல்வாரா தமிழக பிஜேபி தலைவர்.
Rate this:
krishna - chennai,இந்தியா
27-செப்-202117:42:27 IST Report Abuse
krishnaRajas சூப்பர் நீதான் உண்மையான டாஸ்மாக் மட்டை பூனை மேல மதில் தலைவரின் சிஷ்யன்.இப்படியே உளறி கொண்டு காலத்தை தள்ளு.எங்கு ஓசி பிரியாணி கிடைக்கும் என அறிவாலயம் வாசலில் நாக்கை தொங்க போட்டு காலத்தை தள்ளு சூப்பர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X