பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்| Dinamalar

பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்

Added : செப் 27, 2021
Share
சண்டிகர் : பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முந்தைய அமைச்சரவையில் இருந்த எட்டு பேர் உட்பட 15 பேர் பதவியேற்றுள்ளனர்.பஞ்சாபில் காங்., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், மூத்த தலைவர் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை சமீபத்தில் ராஜினாமா
 பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்

சண்டிகர் : பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முந்தைய அமைச்சரவையில் இருந்த எட்டு பேர் உட்பட 15 பேர் பதவியேற்றுள்ளனர்.பஞ்சாபில் காங்., அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், மூத்த தலைவர் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.இதையடுத்து சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பதவியேற்றார்.

சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மற்றும் ஓ.பி. சோனி ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்.முதல்வரையும் சேர்த்து 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்க முடியும். அந்த வகையில் 15 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். மாநில கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அமரீந்தர் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எட்டு பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏழு பேர் முதல் முறையாக அமைச்சராகியுள்ளனர்.மணல் குத்தகை ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக 2018ல் பதவி விலகிய ரானா குர்ஜித் சிங் மீண்டும் அமைச்சராகியுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவியை வழங்கக் கூடாது என, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X