பொது செய்தி

தமிழ்நாடு

அமைந்தகரை நடைபாதை விநாயகர் கோவில் அகற்றம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
அமைந்தகரை-நடைபாதையில் பாதசாரிகளுக்கு இடையூறாக இருந்த விநாயகர் கோவில், நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது.சென்னை, அமைந்தகரை, ரயில்வே காலனி இரண்டாவது தெரு நடைபாதையில், 3 அடி உயரத்தில் செல்வ விநாயகர் கோவில் அமைந்திருந்தது.இந்த கோவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக, நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகளின் நிறுவனத் தலைவர் வேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து,

அமைந்தகரை-நடைபாதையில் பாதசாரிகளுக்கு இடையூறாக இருந்த விநாயகர் கோவில், நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது.சென்னை, அமைந்தகரை, ரயில்வே காலனி இரண்டாவது தெரு நடைபாதையில், 3 அடி உயரத்தில் செல்வ விநாயகர் கோவில் அமைந்திருந்தது.இந்த கோவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக, நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகளின் நிறுவனத் தலைவர் வேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து, அந்த கோவிலை நடைபாதையில் இருந்து அகற்ற, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில், நேற்று அதிகாலை சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டல அதிகாரிகள் தலைமையில், 15க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், விநாயகர் கோவிலை ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர்.அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில், அமைந்தகரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X