சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது

Added : செப் 27, 2021
Share
Advertisement
திருவள்ளூர் மாவட்டம் முழுதும் ஒரே நாளில், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட, 27 ரவுடிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடுகள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் படி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார்.இதையடுத்து, திருவள்ளூர், மணவாள நகர், வெள்ளவேடு,

திருவள்ளூர் மாவட்டம் முழுதும் ஒரே நாளில், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட, 27 ரவுடிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடுகள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் படி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார்.இதையடுத்து, திருவள்ளூர், மணவாள நகர், வெள்ளவேடு, புல்லரம்பாக்கம், பொன்னேரி, சோழவரம், செவ்வாப்பேட்டை, மப்பேடு. திருத்தணி, மீஞ்சூர், ஆரம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் நேற்று முன்தினம், ஒரே நாளில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மொத்தம், 27 ரவுடிகளை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, செயின் போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.அந்த வகையில், திருவள்ளூர் தாலுகா மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் இளவரசன் 21, அய்யப்பன் 22, செரீப் 23, சீயாம்ராபர்ட் 30, புல்லரம்பாக்கத்தில் சரண்ராஜ் 20, பாலா 19, ராஜ்கமல் 23, பிரவீன் 25. முனிகிருஷ்ணன் 50, திருத்தணியில் சரவணன் 32, குமார் 28, செவ்வாப்பேட்டையில் ஜெகந்நாதன் 26, வருண்குமார் (எ) சூறாவளி 19, வேப்பம்பட்டில் தினேஷ்குமார் 21. மணவாள நகரில் வெங்கடேசன் 23, மற்றும் பிரவீன் 22, மப்பேட்டில் தினேஷ் 25, வெள்ளவேட்டில் சஞ்சய் 20 மற்றும் சசிகுமார் 28, என, மொத்தம், 19 பேரை கைது செய்தனர்.இதே போல், பொன்னேரியில், சங்கர் 21, பிரசாந்த் 24, மீஞ்சூரில் அஜித் 21, ராஜா என்கிற ரீத்திஸ்வரன் 26, சோழவரத்தில், பிரபு 22, மதன்குமார் 24, அஸ்வின் 26 ஆரம்பாக்கத்தில் தியாகு 37ல் ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X