சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.2.49 லட்சம், மதுபாட்டில் சோதனையில் பறிமுதல் 

Added : செப் 27, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2.49 லட்சம் ரூபாய், ஐந்து பெட்டி மதுபானங்கள், சேலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்து ஒன்றியங்களிலும், 24 மணி நேரத்திற்கு மூன்று 'ஷிப்டு' களில், 15 பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், பொருட்கள், மது என, அனைத்து வகையான பொருட்களையும்,

காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2.49 லட்சம் ரூபாய், ஐந்து பெட்டி மதுபானங்கள், சேலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்து ஒன்றியங்களிலும், 24 மணி நேரத்திற்கு மூன்று 'ஷிப்டு' களில், 15 பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், பொருட்கள், மது என, அனைத்து வகையான பொருட்களையும், அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் அதிகம் இருக்கும் என்பதால், சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.இருப்பினும், மாவட்ட அளவில் இதுவரை குறைவான அளவே பொருட்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல், 2.49 லட்சம் ரூபாயும், 300 டவல், 250 பித்தளை விளக்கு, ஐந்து பெட்டி மதுபானங்கள், 29 சேலை ஆகியவை, ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லும்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் நடைமுறையின்போது, கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்படும். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் கண்காணிப்பு தீவிரம் பெரிதாக இல்லை என்பது தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X