3,170! : காஞ்சியில் 7,036; செங்கையில் 10,884 : 346 பேர் போட்டியின்றி தேர்வாகினர்| Dinamalar

தமிழ்நாடு

3,170! : காஞ்சியில் 7,036; செங்கையில் 10,884 : 346 பேர் போட்டியின்றி தேர்வாகினர்

Added : செப் 27, 2021 | கருத்துகள் (1)
Share
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சியில் 7,036 பேரும், செங்கல்பட்டில் 10 ஆயிரத்து, 884 பேரும் போட்டியிடுகின்றனர். 3,170 பேர் 'வாபஸ்' பெற்றனர்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், அக்., 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற
 3,170! : காஞ்சியில் 7,036; செங்கையில் 10,884 : 346 பேர் போட்டியின்றி தேர்வாகினர்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சியில் 7,036 பேரும், செங்கல்பட்டில் 10 ஆயிரத்து, 884 பேரும் போட்டியிடுகின்றனர்.

3,170 பேர் 'வாபஸ்' பெற்றனர்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், அக்., 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.வேட்பு மனு தாக்கல் முடிந்து, மனுக்கள் மீது கூர்ந்தாய்வு பணிகளும் முடிந்து, நேற்று முன்தினம் 'வாபஸ்' பெறும் படலங்களும் முடிந்துள்ளன.உள்நோக்கம்வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது. ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணிகளும் துவங்கி நடைபெற்று வருகின்றன.வேட்பு மனுக்கள் மீதான கூர்ந்தாய்வு முடிந்து வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட போதிலும், ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,327 வேட்பாளர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,843 வேட்பாளர்களும் வாபஸ் பெற்றுள்ளனர்.அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னும், இரு மாவட்டங்களில், 3,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளதால், பலர் உள்நோக்கத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட, வாபஸ் பெற்ற வேட்பு மனுக்கள் எண்ணிக்கை, பல மடங்கு அதிகமாக உள்ளது.

ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ள இடங்களில், வேட்பாளர்கள் பேரம் பேசி, வாபஸ் பெற்றிருக்கலாம்.விலை பேசி 'வாபஸ்'குறிப்பாக வளம் கொழிக்கும் ஊராட்சிகளில் போட்டியிடும் நபர்களுக்கு விலை பேசி, வாபஸ் பெற வைப்பது, இந்த தேர்தலிலும் தொடர்கிறது.இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,321 பதவி இடங்களில், 2,171 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமங்கலம், மருதம், புலிப்பாக்கம், சின்னாளம்பாடி ஆகிய நான்கு ஊராட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி ஊராட்சி தலைவர்கள் ஆகின்றனர்.உறுதிஅதேபோல் மாவட்ட அளவில், 145 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் போட்டியின்றி தேர்வாகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு பதவிகளுக்கும் சேர்த்து, 7,036 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,208 பதவி இடங்களில், 3,011 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.செம்பூண்டி, கடம்பூர், களத்துார், வேலாமூர், தின்னலுார், வடமணிப்பாக்கம், மேல்மருவத்துார், தண்டலம், குண்ணவாக்கம், பெரியகாட்டுப்பாக்கம், பனங்காட்டுப்பாக்கம் ஆகிய 11 ஊராட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

அதேபோல் வார்டு உறுப்பினர் பதவிக்கு, 186 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். நான்கு பதவிகளுக்கும், மாவட்ட அளவில் 10 ஆயிரத்து 884 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.------------காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடுவோர் விபரம்பதவி மொத்த இடம் வேட்பு மனு தள்ளுபடி வாபஸ் போட்டியிடுவோர் போட்டியின்றி தேர்வு தேர்தல் நடக்கும் பதவிமாவட்ட கவுன்சிலர் 11 86 3 19 64 0 11ஒன்றிய கவுன்சிலர் 98 535 16 135 384 0 98ஊராட்சி தலைவர் 274 1,395 22 447 922 4 269வார்டு உறுப்பினர் 1,938 6,587 50 726 5,666 145 1,793மொத்தம் 2,321 8,603 91 1,327 7,036 149 2171செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடுவோர் விபரம்பதவி மொத்த இடம் வேட்பு மனு தள்ளுபடி வாபஸ் போட்டியிடுவோர் போட்டியின்றி தேர்வு தேர்தல் நடக்கும் பதவிமாவட்ட கவுன்சிலர் 16 156 1 31 124 0 16ஒன்றிய கவுன்சிலர் 154 1,015 10 254 751 0 154ஊராட்சி தலைவர் 359 2,022 13 603 1,395 11 348வார்டு உறுப்பினர் 2,679 9,834 79 955 8,614 186 2,493மொத்தம் 3,208 13,027 103 1,843 10,884 197 3,011கும்மிடிப்பூண்டியில்ஐந்து ஒன்றானதுதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சிகளுக்கு உட்பட்ட, ஆறு கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம், 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில் மேல்முதலம்பேடு, மாநெல்லுார், ஆரம்பாக்கம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு, தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

எளாவூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களில் ஒருவர் நேற்று, வாபஸ் பெற்றார். எஞ்சிய ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில், ஐந்தாவது வார்டுக்கு இருவர், இரண்டாவது வார்டுக்கு நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.அதன்படி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

- -நமது நிருபர் குழு- -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X