பொது செய்தி

தமிழ்நாடு

நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
நாகப்பட்டினம் : நாகை அருகே, கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது 17 ஐம்பொன் சிலைகளும், 36 வகையான பூஜை பொருட்களும் கிடைத்தன.நாகை மாவட்டம், தேவூரில் அமைந்துள்ளது, மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வரர் கோவில். இது, கோச்செங்கட்டுவ சோழன் கட்டிய மாடக் கோவிலாகும். பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. நேற்று

நாகப்பட்டினம் : நாகை அருகே, கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது 17 ஐம்பொன் சிலைகளும், 36 வகையான பூஜை பொருட்களும் கிடைத்தன.



latest tamil news


நாகை மாவட்டம், தேவூரில் அமைந்துள்ளது, மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வரர் கோவில். இது, கோச்செங்கட்டுவ சோழன் கட்டிய மாடக் கோவிலாகும். பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை நவக்கிரஹ சன்னிதிக்கு பின்புறம், கான்கிரீட் பணிக்காக தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர்.இதில் 7 அடி வரை பள்ளம் தோண்டியதில் 4 அடி உயர காட்சி கொடுத்த நாயகர், காட்சி கொடுத்த நாயகி 3 அடி உயர அம்பாள் 12 கைகளுடன் கூடிய பைரவர், திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் 2 அடி உயர அஸ்திரதேவர் என மொத்தம் 17 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.


latest tamil news


மேலும், ஐம்பொன்னாலான தாம்பூலம், கமண்டலம், துாபக்கால், விசிறி போன்ற 36 வகையான பூஜை பொருட்களும் அடுத்தடுத்து கிடைத்தன.செயல் அலுவலர் கண்ணன் கூறுகையில், ''தோண்ட தோண்ட பொருட்கள் கிடைப்பதால் பணிகளை நிறுத்தி, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களது மேற்பார்வையில், இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி துவங்கும். சிலைகளும், பொருட்களும் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது, தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்,'' என்றார். தேவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கும்பல் கும்பலாக வந்து, சிலைகளை வணங்கி சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
27-செப்-202117:18:23 IST Report Abuse
DVRR (சேகர்) பாபர் இன்னும் ஒரு செய்தியும் இதை பற்றி வெளியிடவில்லையே "பழைய கடவுள் சிலைகள் ரூ 350 கோடிக்கு மீட்டெடுப்பு" (சேகர்) பாபர் இப்படி இல்லே செய்தி வரவேண்டும்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-செப்-202116:45:26 IST Report Abuse
r.sundaram முகலாயர் படையெடுப்பு காரணமாக புதைக்கப்பட்ட சிலைகளா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-செப்-202114:13:48 IST Report Abuse
sankaseshan சினே கு பாபு சிலைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி ஆட்டையை போடாமல் இருக்கணும்இது பெரியார் மண் இல்லை ஆன்மிக மண் என்று கூமுட்டை திரவிடானின்களுக்கு புரியனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X