சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாமில் கூரை சரிந்தது

Added : செப் 27, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்-உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் அரசு தொடக்கப் பள்ளியில், நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் கட்டடத்தின் கூரை திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உத்திரமேரூர் அடுத்த ஆனைப்பள்ளம் கிராமத்தில், 1957ல் துவக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 2015 - 16ம் ஆண்டில், ஒன்றிய பொது நிதியில் பள்ளி கட்டடம் சீரமைக்கப்பட்டு உள்ளது.கொரோனா

உத்திரமேரூர்-உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் அரசு தொடக்கப் பள்ளியில், நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் கட்டடத்தின் கூரை திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உத்திரமேரூர் அடுத்த ஆனைப்பள்ளம் கிராமத்தில், 1957ல் துவக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 2015 - 16ம் ஆண்டில், ஒன்றிய பொது நிதியில் பள்ளி கட்டடம் சீரமைக்கப்பட்டு உள்ளது.கொரோனா காரணமாக 18 மாதங்களாக மூடப்பட்டுள்ள இப்பள்ளி வளாகத்தில், உத்திரமேரூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.பகல், 2:30 மணிக்கு கட்டடத்தின் ஓடு வேய்த கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. அங்கிருந்த பொதுமக்களும், சுகாதாரத் துறையினரும் பயத்தில் அலறியடித்து ஓடினர்.இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் மற்றொரு பள்ளி கட்டடத்திற்குள் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடந்தது.கொரோனா ஊரடங்கு மற்றும் விடுமுறை தினமான நேற்று, பள்ளி திறக்கப் படாததாலும், கூரை அருகில் யாரும் இல்லாததாலும், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X