பொது செய்தி

தமிழ்நாடு

ஒரத்துார் ஏரியில் இரு முறை சீரமைத்த அதிகாரிகள்

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்--பட்டா நிலம் கையகப்படுத்தும் முன், நீர்த்தேக்க பணிக்காக ஒரத்துார் ஏரியின் 2 கி.மீ., கரையை அகற்றிய பொதுப்பணித் துறையினர், பருவ மழை துவங்கவுள்ளதால் மண் கொட்டி கரை எழுப்பி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரத்துார் அருகே, அடையாறு கால்வாயின் கிளை கால்வாய் துவங்குகிறது.கரை அகற்றம்இந்த கால்வாய் இடையே உள்ள ஒரத்துார் ஏரி மற்றும்

ஸ்ரீபெரும்புதுார்--பட்டா நிலம் கையகப்படுத்தும் முன், நீர்த்தேக்க பணிக்காக ஒரத்துார் ஏரியின் 2 கி.மீ., கரையை அகற்றிய பொதுப்பணித் துறையினர், பருவ மழை துவங்கவுள்ளதால் மண் கொட்டி கரை எழுப்பி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரத்துார் அருகே, அடையாறு கால்வாயின் கிளை கால்வாய் துவங்குகிறது.கரை அகற்றம்இந்த கால்வாய் இடையே உள்ள ஒரத்துார் ஏரி மற்றும் ஆரம்பாக்கம் ஏரியை இணைத்து, 55.85 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, 2019ல் துவங்கியது. 763 ஏக்கரில், 750 மி.க.அடி கொள்ளளவு நீரை தேக்கலாம்.ஒரத்துார் நீர்த்தேக்கத்தில் இருந்து அம்மணம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் இணைப்பு கால்வாய் அமைக்கப்படுகிறது.அடையாறு கிளை கால்வாய் துவங்கும் இடத்தில், 'ஷட்டர்'களுடன் கூடிய ஐந்து கண் மதகு அமைக்கப்பட்டுள்ளது.இந்த மதகில் இருந்து ஆரம்பாக்கம் ஏரி வரை நீர்த்தேக்கத்திற்கான புதிய கரை அமைக்கப்பட்டுவிட்டது. அதேபோல் மறுபுறம் மதகில் இருந்து ஒரத்துார் ஏரி வரை புதிய கரை அமைக்கப்படவில்லை.புதிய கரையை 420 மீட்டர் துாரத்திற்கு அமைக்க, அப்பகுதியில் உள்ள 40 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.நிலம் கையகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில், பொதுப்பணித் துறையினர் நீர்த்தேக்க பணிக்கு புதிய கரை அமைவதற்கு ஏதுவாக, ஒரத்துார் ஏரியின் பழைய கரையை 2 கி.மீ., துாரத்திற்கு ஜே.சி.பி., இயந்திரம் வைத்து, நான்கு மாதங்களுக்கு முன் வெட்டி அகற்றிவிட்டனர்.இந்நிலையில், 22ம் தேதி கனமழையின் போது, ஒரத்துார் நீர்த்தேக்கத்தின் தற்காலிக கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமானது.பதில் இல்லைஉடைந்த தற்காலிக கரையை பொதுப்பணித் துறையினர் மண் கொட்டி மறுநாள் சீரமைத்தனர். ஆனால் பருவ மழை துவங்க உள்ளதால் ஒரத்துார் ஏரியில் அகற்றப்பட்ட கரை வழியே தண்ணீர் மீண்டும் வெளியேறும் என்ற அச்சத்தில், ஜே.சி.பி., வைத்து மீண்டும் கரை அமைத்து வருகின்றனர்.ஒரத்துார் விவசாயிகள் கூறியதாவது:பத்து அடி உயரத்திற்கு இருந்த ஒரத்துார் ஏரிக்கரையை, பொதுப்பணித் துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தால் அகற்றிவிட்டனர். புதிய கரை அமைக்காமல், பழைய கரையை ஏன் வெட்டி எடுகிறீர்கள் என கேட்டதற்கு பதில் இல்லை.வியப்புதற்போது பெய்யும் கன மழையால் ஒரத்துார் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கனமழை அதிகரித்தால் தண்ணீர் வெளியேறிவிடும் என்ற அச்சத்தில் பொதுப்பணித் துறையினர், கரை அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் மண் கொட்டி, மேடு எழுப்பி வருகின்றனர்.அதிகாரிகளின் திட்டமிடலையும், அறிவையும் கண்டு நாங்கள் வியப்படைந்துள்ளோம். தமிழக அரசு ஒரத்துார் நீர்த்தேக்கத்தை நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X