பொது செய்தி

தமிழ்நாடு

வைட்டமின் 'ப, சி'னா என்ன?

Added : செப் 27, 2021
Share
Advertisement
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மூன்றாவது வார்டு மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் குமார் இறந்ததால், இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடத்திற்கு தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் புரட்சி பாரதம், அ.ம.மு.க., மற்றும் சுயேச்சை என நால்வர் போட்டியிடுகின்றனர்.அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, ஊத்துக்கோட்டையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய முக்கிய பிரமுகர், 'ஒவ்வொரு

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மூன்றாவது வார்டு மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் குமார் இறந்ததால், இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த இடத்திற்கு தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் புரட்சி பாரதம், அ.ம.மு.க., மற்றும் சுயேச்சை என நால்வர் போட்டியிடுகின்றனர்.அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, ஊத்துக்கோட்டையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய முக்கிய பிரமுகர், 'ஒவ்வொரு வீடாக சென்று, ஓட்டு கேட்க வேண்டும். தி.மு.க., ஆட்சியின் மின்வெட்டு, 'நீட்' தேர்வுக்கு தீர்வு காணாததை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். மற்றபடி வைட்டமின் 'ப'வை நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என்றார். தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, போந்தவாக்கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டத்தின் முக்கிய புள்ளி இவ்வாறு பேசினார்:

'தி.மு.க.,வின் நான்கு மாத ஆட்சியின் சாதனைகளை சொல்லி நாம் ஓட்டு கேட்க வேண்டும். மற்றபடி, ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை வரை அனைத்து பணிகளை செய்து கொள்கிறோம்' என்றார்.அப்போது நிருபர் எழுந்து, 'அ.தி.மு.க.,வினர் 'ப' தருவதாக கூறுகின்றனர். நீங்கள், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்கிறீர்கள். அப்படினா என்ன அர்த்தம்' என்றார்.அதற்கு அந்த முக்கிய புள்ளி, 'அவர்கள் 'ப' கொடுத்தால் நாங்கள், 'சி' கொடுக்கிறோம். நாங்கள் சொன்னது கொரோனா தடுப்பூ'சி' என, 'கூலாக' கூறிவிட்டு சென்றார்.பணத்திற்கு தமிழில் 'ப' என்பதும், 'கேஷ்'க்கு 'சி' என்பதும், பொதுமக்களுக்கு நல்லாவே தெரியும் 'ரிப்போர்ட்டரே' என, உடன் இருந்த கட்சியினர் வாயை அடைத்தனர். மொத்தத்தில் விடை ஒன்று தான்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X