பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : தமிழகம் முழுதும் மூன்றாவது முறையாக நேற்று நடந்த 'மெகா' தடுப்பூசி முகாமில், 15 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கை தாண்டி, 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், விரைவாக தடுப்பூசி போடும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாதம், 12ம் தேதி நடந்த முதல்

சென்னை : தமிழகம் முழுதும் மூன்றாவது முறையாக நேற்று நடந்த 'மெகா' தடுப்பூசி முகாமில், 15 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கை தாண்டி, 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.latest tamil news
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், விரைவாக தடுப்பூசி போடும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாதம், 12ம் தேதி நடந்த முதல் மெகா சிறப்பு முகாமில், 28.91 லட்சம் பேருக்கும்; 19ம் தேதி நடந்த இரண்டாவது மெகா முகாமில், 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுதும் நேற்று நடந்தது. சென்னையில் 1,600 இடங்கள் உட்பட மாநிலம் முழுதும், 23 ஆயிரத்து 436 இடங்களில் முகாம்கள் நடந்தன.

முதல்வர் ஆய்வு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பட்டாளம் தட்சிணாமூர்த்தி திருமண மண்டபம், ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளி, அயனாவரம் நேரு திருமண மண்டபம், பெத்தேல் பள்ளி என ஐந்து இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தடுப்பூசி முகாம்களை, தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்தார்.

மாநிலம் முழுதும் 15 லட்சம் பேருக்கு நேற்று தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை தாண்டி 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 பேருக்கு தடுப்பூசி போட்டு மூன்றாவது முறையாக, தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. வதந்திகளை நம்பாதீர்!சென்னையின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாமை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். முடிவில் அவர் அளித்த பேட்டி:பெரும்பாலான தொற்று பாதிப்புகள், குடும்ப நிகழ்ச்சிகள் வாயிலாகவே வருகின்றன.


latest tamil news
அரியலுார், கடலுார், சேலம் மாவட்டங்களில், இதுபோன்ற பரவல் அதிகம் கண்டறியப்பட்டு உள்ளது. திண்டுக்கல், நீலகிரி, தேனி மாவட்டங்களில் பணி நிமித்தமாக செல்வோராலும்; நாகப்பட்டினம், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் பொழுபோக்கு இடங்களுக்கு செல்வோராலும் தொற்று பரவுகிறது.கரூர், திருப்பத்துார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை செய்யும் இடங்கள் வாயிலாகவும்; சென்னையில் பணி சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்குகளாலும் தொற்று அதிகமாவது தெரிய வந்து உள்ளது.

மாநிலம் முழுதும் 60 வயதை கடந்த, 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 41.78 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு எல்லாம், அக்டோபருக்குள் தடுப்பூசி போடப்பட்டு விடும். சிறப்பு முகாம்களில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்துவது குறித்து, ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja S M - y,சிங்கப்பூர்
27-செப்-202112:03:55 IST Report Abuse
Raja S M முதல் டோஸ் போட்டாச்சு, ஏன் இரண்டாம் டோஸ் போடுவதற்கு உண்டான அப்பாயின்மென்ட் புக் பண்ண ஸ்கெட்யூல் வரமாட்டேங்குது, எந்த சென்டரும் காட்ட மாட்டேங்குது...
Rate this:
Elay - Chennai,இந்தியா
27-செப்-202116:47:23 IST Report Abuse
ElayPlease check in the "cowin" website. It will show the date for the second dose. It is good to use the Vaccine camps. It is free and fast....
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் எதிரிகட்சியாக இருக்கும் போது பேச்சாடா பேசுனீங்க, மோடி ஊசி மோடி ஏன் போட்டுகல, மக்கள் என்ன பரிசோதனை எலிகளா ன்னு மக்களை எவ்வளவு குழப்புனீங்க உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி 🍅 சட்டினி யா
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-செப்-202108:04:11 IST Report Abuse
duruvasar இறைவனுக்கு நன்றி நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X