ஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் சிறப்பான வரவேற்பு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
பீஜிங் : கனடாவில் சிறை வைக்கப்பட்டிருந்த, சீனாவைச் சேர்ந்த ஹூவாய் என்ற மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்தின் பெண் அதிகாரி மெங் வான்ஜூ, மூன்று ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.அவருக்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனத்தின் தலைவர் ரென் ஜெங்பெய்யின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்ஜூ, 49,

பீஜிங் : கனடாவில் சிறை வைக்கப்பட்டிருந்த, சீனாவைச் சேர்ந்த ஹூவாய் என்ற மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்தின் பெண் அதிகாரி மெங் வான்ஜூ, மூன்று ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.



latest tamil news




அவருக்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனத்தின் தலைவர் ரென் ஜெங்பெய்யின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்ஜூ, 49, கடந்த 2018ல் கனடாவில் கைது செய்யப்பட்டார்.வங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவின் தடையை மீறி ஈரான் நாட்டில் தொழில் செய்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகம் தொடர்பாக பெரும் மோதல் வெடித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்பின் உத்தரவால் அவர் கைது செய்யப்பட்டார்.அதற்கடுத்த சில நாட்களில், கனடாவைச் சேர்ந்த முன்னாள் துாதரக அதிகாரிகளும், தொழிலதிபர்களுமான மைக்கேல் கோவ்ரிக் மற்றும் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோர் உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news




கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்த மெங் வான்ஜூவை விடுதலை செய்வதற்காக சீனா முயற்சி மேற்கொண்டது. அமெரிக்காவுடன் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தை அடுத்து, மெங் விடுதலை செய்யப்பட்டார்.சீன அரசு அனுப்பிய சிறப்பு விமானம் வாயிலாக சென்ஜென் விமான நிலையத்துக்கு அவர் நேற்று வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதே நேரத்தில், கனடா தொழிலதிபர்களான கோவ்ரிக் மற்றும் ஸ்பேவர் ஆகியோரை சீனா விடுதலை செய்துள்ளது. இந்த தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
27-செப்-202116:37:54 IST Report Abuse
Appan 5G டெக்னாலஜியில் சீனா முன்னணியில் உள்ளது..இதை ஜீரணிக்க முடியாத அமெரிக்க இவரை தொழில் நுட்பம் திருடி னார் என்று ஜெயிலில் போட்டார்கள்.. அமெரிக்க ஒருகாலத்தில் டெக்னாலஜியில் முன்னணியில் இருந்தது.. இப்போ டிரம்ப் வந்து அமெரிக்க பின் நோக்கி போய்விட்டது..என்னும் இதில் இருந்து மீளவில்லை..என்ன சீனா இந்தியாவுடன் சேர்ந்து உலகை ஆளலாம் ..அனால் சீனா இந்தியாவுடனும் சண்டை போடுகிறது..5G டெக்னாலஜிக்கு அதிக மார்க்கெட் இந்தியா தான்..இந்தியாவை பகைத்து சீன என்ன செய்ய போகிறது.. அது சரி சீனாகாரன் செய்யும் பொது ஏன் இந்தியர்கள் செய்ய முடியவில்லை.. இதில் வருத்தம் என்ன என்றால் இன்னும் ஒரு நல்ல மொபைல் போன் இந்தியாவில் உற்பத்தி பண்ண முடியவில்லை..இதோடு Chip பும் இன்னும் நாம் உண்டாக்க முடியவில்லை..இப்போ உலகளவில் Chip தட்டுப்பாடு உள்ளது.. இவ்வளவு இருந்து இந்திய என்ன செய்கிறது..
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
27-செப்-202108:33:40 IST Report Abuse
ganesha துண்டுக்கு கீழே விரலை விட்டு மாட்டுக்கு பேரம் பேசுவதன் அடுத்த பரிமாணம் இது. ஆமாம் இந்திரன் . 2.0 மாதிரி இதுவும் ஒரு 2.0 தான்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-செப்-202108:17:53 IST Report Abuse
Duruvesan வீரபெண்மணியை ராவுள் மற்றும் விடியல் பாராட்டி கடிதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X