தமிழ்நாடு

1,06,018 பேருக்கு தடுப்பூசி; மெகா முகாமில் சாதனை

Added : செப் 27, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார். மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், ஓட்டுச்சாவடிகள் என 331 மையங்களில் முகாம் நடந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார். மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், ஓட்டுச்சாவடிகள் என 331 மையங்களில் முகாம் நடந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிசெலுத்த முன்னேற்பாடுகள் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 1200 பேர் ஈடுபட்டனர். 60,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் முகாம் நடந்தது. கிராம ஊராட்சிகளில் நடந்த முகாமை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அபிதா ஹனிப், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை மற்றும் பி.டி.ஓ.,க்கள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X